11.02.2010

காலையில் வடமட்டம் காத்தாயி அம்மன் திருமண மண்டபத்திலிருந்து புறப்பட்டோம். மதிமுக தோழர் எம். பட்டாபிராமன் வீட்டிற்குச் சென்று உணவு உண்டோம். வடமட்டத்தில் தோழர் தியாகு உரையாற்றினார். அங்கிருந்து சற்குணேஷ்வரம், கருவிலி, கூந்தலூர், செவந்திநாதபுரம், மணவாளநல்லூர் வழியாக இரவாஞ்சேரிக்கு மதியம் வந்தடைந்தோம். மதிமுக ஒன்றியப் பிரதிநிதி ஸ்டீபன்ராஜ் மதிய உணவு தந்தார். ப+ந்தலூர் வழியாகச் சீத்தக்க மங்கலம், பிரதாபராமபுரம், பிலாவடி, 27 புளியஞ்சேரி, ஆவணம், புதுப்பாளையம், சீத்தாடி, ஆடிப்புலிய+ர் ஊராட்சி, இராதாநல்லூர் வழியாக குடவாசல் வந்தடைந்தோம். சி.டி. திருமண அரங்கில் தங்கினோம்.

12.02.2010

அகரஓகை (எ) ஓகை, மணப்பறவை ஊராட்சி, மாதாக்கோவில், துறைய+ர், கீழ்த்துறைய+ர், கருப்ப+ர், விடையல் கருப்ப+ர், ஆண்டாங்கோவில், புங்கஞ்சேரி வழியாக வலங்கைமான் வந்தடைந்தோம். அப்போது மணி 4; திரு அமீர்ஜான் மதிய உணவு ஏற்பாடு செய்து காத்திருந்தார். கட்டபுலி திருமண மண்டபத்தில் இரவு தங்கினோம்; எல்லா ஏற்பாடும் செய்து தந்தார் ஐயா சுப்பிரமணியம் அவர்கள் உதவியுடன் தோழர் அமீர்ஜான்.

வலங்கைமானில் கடைவீதி, மாரியம்மன் கோவில் என 3 இடங்களில் தோழர் தியாகு உரையாற்றினார்.

13.02.2010

விருப்பாச்சிபுரம், கோல்டன் சிட்டி, ஆதிச்சமங்கலம். சந்திரசேகரபுரம் வழியாக நடந்தோம். தோழர் தியாகுவின் தாய் தந்தையைப் பார்த்து சிறிதுநேரம் உரையாடிவிட்டுப் புறப்பட்டோம். அணியமங்கலம் அருகில் சென்று கொண்டிருந்த போது எங்களுடன் சேர்ந்து கொண்டார் தோழர் திருநாவுக்கரசு. தட்டுமால் படுகை, கோவிந்தகுடி, ஆவ+ர் சென்றோம். கோவிந்தகுடியில் ஆவ+ர் கோபால் எங்களை வரவேற்றுப் பேசினார். தோழர் தியாகு நடைப்பயணத்தை விளக்கிப் பேசினார். ஆவுடையார் நத்தம், சேரி, களத்தூர் வழியாக பயரி சென்றோம். திரு கிருஷ்ணமணி (எ) ராஜா அவர்கள் வீட்டில் மதிய உணவு தந்தார். சிறிது நேரம் அவர் வீட்டில் ஓய்வு எடுத்துப் புறப்பட்டோம். அவளிவநல்லூரில் தோழர்கள் திருநாவுக்கரசு, தியாகு இருவரும் உரையாற்றினர். அங்கிருந்து செம்பிய நல்லூருக்கு எங்களை அழைத்துச் சென்றார் தோழர் திருநாவுக்கரசு,

அவரின் இயற்கை வேளாண் பண்ணை வீட்டில் தங்க வைத்து உணவு தந்து சிறப்பித்தார்.

14.02.2010

காலையில் தோழர் அரசு தன் வீட்டில் உணவு தந்தார். அந்த இயற்கைச் சூழலிலே குளித்து, உணவு உண்டோம். அங்கிருந்து 11 மணியளவில் புறப்பட்டோம். இருகரை, ரெகுநாதபுரம், அழித்துவார மங்கலம், கேத்தனூர், ஒத்தக்கடை வழியாக நடந்தோம்.

அரித்துவாரமங்கலத்தில் எங்களைச் சந்தித்துப் பழப்பெட்டிகள் கொடுத்து உடன் பயணித்தார் முனைவர் த. செயராமன் . அங்கு தோழர் தியாகு உரையாற்றினார். ஆலங்குடியில் முனைவர் த. செயராமனும் தியாகுவும் உரையாற்றினர்.

புலவர் நத்தம், நரிக்குடி, நார்த்தங்குடி, கொட்டைய+ர் வழியாக நீடாமங்கலம் வந்தடைந்தோம். முனைவர் த. செயராமன் நடைப்பயணம் குறித்து விரிவாகப் பேசினார். தோழர் தியாகு விளக்க உரையாற்றினார்.

மதிமுக நகரச் செயலாளர் மாருதி எம். தியாகராஜன், ஒன்றியச் செயலாளர் நா. இராசமாணிக்கம் இருவரும் உணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்திருந்தனர். இராஜேஷ்வரி திருமண மண்டபத்தில் தங்கினோம்.

15.02.2010

நீடாமங்கலம் வெண்ணாற்றுப் பாலம் கடந்து ஒளிமதி ஊராட்சி, வையகளத்தூர், கிளறியம், விஸ்வநாதபுரம் வழியாக கொரடாச்சேரி வந்தோம். சிபிஐ தோழர்கள் மதிய உணவு தந்தனர். மாலையில் தோழர் தியாகு விளக்கவுரையாற்றினார். இரவு வி.கே.என் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டோம். மதிமுக ஒன்றியச் செயலாளர் கே. பெருமாள் இரவு உணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்து தந்தார்.

16.02.2010

காலை 10 மணியளவில் புறப்பட்டு ஊர்க்குடி, கொத்தவாசல், ஆயக்குடி, முகந்தனூர் , எண்கன், காப்பணாமங்கலம் வழியாகப் பெரும்பண்ணைய+ர் வந்தோம.; தியாகுவை அறிந்துவைத்திருந்த பொதுமக்கள் மிகச் சிறப்பாக வரவேற்றனர். தேநீர், இளநீர், பழம் என்று அன்போடு தந்தனர். நடைப் பயணத்தை வாழ்த்தி வழியனுப்பினர். செப்பங்குடி, அரசவணங்காடு, மணக்கால் சென்றோம். அங்கு சிபிஐ ஒன்றியச் செயலாளர் எம்.என். சேரன் தன் வீட்டில் மதிய உணவு தந்தார். ஐயம்பேட்டை வழியாக அம்மையப்பன் வந்தடைந்தோம். தோழர் தியாகு இவ்விரு ஊர்களிலும் உரை யாற்றினார். இரவு எலக்குடி மாரியம்மன் திருமண மண்டபத்தில் தங்கினோம்.

17.02.2010

காலையில் தண்டலை, விளமல் வழியாகத் திருவாரூர் வந்தடைந்தோம். தமிழர் தன்மானப் பேரவை ஏற்பாட்டில் அவர்கள் அலுவலகத்தில் மதிய உணவு தந்தனர். தோழர் ‘ஏ.ஜி.கே’ அவர்களைச் சந்தித்தோம். திருவாரூரில் தோழர் தியாகு பேசினார். இரவு ததபே தோழர் நா. காமராசு அவர்கள் வீட்டில் தங்கினோம்.

18.02.2010

வாளவாய்க்கால், புலிவலம், கூரூர், நாரணமங்கலம் பாண்டவையா, மாங்குடி, தெண்ணவராய நல்லூர் வழியாக மாங்குடி வந்தோம். அங்கு சிபிஐ கட்சி சார்பில் இளநீர் தந்து வரவேற்றுப் பேசினர். தோழர் தியாகு விளக்க உரையாற்றினார்.

ஆத்தூர், திருநெய்ப்பேர், குன்னிய+ர் வழியாக மாவ+ர் வந்தோம். இங்கு பெரியாரின் நண்பர் மாவ+ர் சர்மா அவர்களின் குளத்துக்கு நடுவில் கட்டப்பட்ட வீட்டைப் பார்த்தோம். இங்குச் சிபிஐ தோழர்கள் வரவேற்றனர். தோழர் தியாகு பேசினார்.

பின்னவாசல், திருக்கரவாசல், கோமல், உத்திரங்குடி பாங்கல் ஊராட்சி, ஆப்பரங்குடி, கச்சனம், கொத்தங்குடி ஆலத்தம்பாடி வழியாக இரவு மணலியை அடைந்தோம். சாந்தி மகாலில் தங்கவைக்கப்பட்டோம்.

19.02.2010

பருத்திச்சேரி, தண்டலைச்சேரி, வேளுர் வழியாக அடப்பாறுபாலம் கடந்து திருத்துறைப்ப+ண்டி அடைந்தோம். தோழர் தேவேந்திரனின் நண்பர் திரு கார்த்திகேயன் ஏற்பாட்டில் மதிய உணவு உண்டோம். சிறிது ஓய்வுக்குப் பின் முள்ளியாறு, மடப்புரம், கொத்தமங்கலம், பள்ளக்கோவில் கடியச்சேரி, மேட்டுப்பாளையம், விளக்குடி, இராயநல்லூர், செட்டியமூலை வழியாக கோட்டூர் வந்தோம். சி.பி.ஐ தோழர்கள் இரவு உணவும் தங்கி ஓய்வெடுக்க திருமண மண்டபமும் ஏற்பாடு செய்தனர். த.தே.பொ.க. தோழர் பாலசுந்தரம் உடனிருந்து உதவினார்.

20.02.2010

காலை 10க்கு கோட்டூரில் தோழர் கதிர்நிலவனும், தோழர் தியாகுவும் உரையாற்றினர். கோட்டூர் தோட்டம், ஓவர்ச்சேரி, ஆதிச்சபுரம், சேரி, முள்ளியாறு, காசாங்குளம், இருவக்குளம், மூன்றாம் சேத்தி வழியாக மன்னார்குடிக்கு நுழைந்தோம். ப+க்கொல்லை தோழர் இரா.பிரபாகரன் மதிய உணவு தந்தார். மன்னார்குடியில் கீழ்பாலம், பெரியக் கடைத்தெரு, பெரியார் சிலை ஆகிய இடங்களில் தோழர் தியாகு பேசினார். நடைப்பயணத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்குப் பட்டுத்துண்டு போர்த்திச் சிறப்புச் செய்தனர். மன்னார்குடித் தமிழன்பர்கள் சார்பாக தமிழ் மீட்பு நிதியத்துக்கு ரூ.25,000 நன்கொடை தந்தார்கள். திருப்ப+ர் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் தோழர் வேலிறையன் ரூ.50,000 கொடுத்தார்.

21.02.2010

மன்னார்குடி ஏ.கே.எஸ். திருமண மண்டபத்திலிருந்து 11 மணிக்குப் புறப்பட்டோம். நெடுவாக்கோட்டை, குமரபுரம், மேலவாசல், காரிக்கோட்டை, செருமங்கலம், எடக்கீழைய+ர், காரக்கோட்டை, எடமேலையூர், புதுக்கோட்டை, உத்தங்குடி வழியாக வடுவூர் நுழைந்தோம். தோழர் தியாகு பயணக்குழு சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். ஹரி (எ) அறிவழகன் தலைமையில் வரவேற்பு தந்தனர். பொதுக் கூட்டமும் ஏற்பாடு செய்திருந்தனர். பேராசிரியர் இளமுருகன் வரவேற்புரையாற்றினார். தோழர் தியாகு நடைப்பயணக் குறிக்கோள்கள் குறித்து விளக்க உரையாற்றினார்.

வடுவூர் தமிழன்பர்கள் சார்பில் ரூ.21,000 தமிழ் மீட்பு நிதியத்துக்கு நன்கொடை தந்தனர். தோழர் முருகேசன் இரவு உணவு ஏற்பாடு செய்து தன் வீட்டில் தங்க வைத்தார்.

22.02.2010

காலையில் தோழர் முருகேசன் அவர்கள் தந்த சிற்றுண்டி உண்டு புறப்பட்டோம். வடவாறு பாலம் கடந்து, வடுவ+ர் பறவைகள் சரணாலயம் பார்த்துவிட்டு கண்ணாறு பாலம் வழியாக நெய்வாசல், குளமங்கலம், கண்ணந்தங்குடி, கண்ணந்தங்குடி கீழைய+ர், கண்ணந்தங்குடி மேலைய+ர், தேத்துக்குளம் சேர்வராயன் குளம் வழியாக ஒரத்தநாடு வந்தோம். த.தே.பொ.க. தோழர் நா.வைகறை வீட்டில் மதிய உணவு தந்தார். மதிமுக தோழர் துரைபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் அர்ஜுனன் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் பழ. இராசேந்திரன், நா.வைகறை பேசினர். தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

இரவு தோழர் நா. வைகறை ஏற்பாட்டில் கே.பி.ஆர் திருமண மண்டபத்தில் உணவு உண்டு தங்கினோம்.

23.02.2010

காரிமுத்து ஏரி வழியாக உரந்தைராயன் குடிக்காடு, புலவன்காடு, வேதபுரி ஆறு கடந்து வெள்ளுர் வழியாக பாப்பாநாடு அடைந்தோம். தோழர் இரா. காமராசு உணவு தந்தார். சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு சோழகன் குடிக்காடு, அம்பலாபட்டு தெற்கு, பரங்கிவெட்டிக்காடு, கரம்பயம், வீரக்குறிச்சி, கஞ்சாநகர், ஏனாதி வழியாக பட்டுக்கோட்டைக்குள் நுழைந்தோம். தலைமை அஞ்சலகம் அருகில் தோழர் பழ. சக்திவேல், பட்டுக்கோட்டை வளவன் ஆகியோர் தெருமுனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். தோழர் தியாகு விளக்க உரையாற்றினார். அரசு பிளாசாவில் உணவு தந்து தங்க வைக்கப்பட்டோம்.

24.02.2010

காலையில் பட்டுக்கோட்டைக் கடைவீதியில் பரப்புரை செய்து உண்டியலடித்து விட்டு மயில்பாளையம் சாலை வழியாக பொண்ண வராயன்கோட்டை, அணைக்காடு வந்தோம். தோழர் எலியட், தன் வீட்டில் மதிய உணவு தந்தார்.

துவரங்குறிச்சி, தர்மகுளம், தாமரங் கோட்டை(வடக்கு), பரக்கலாக் கோட்டை, தம்பிக்கோட்டை, காவல்துறை பாதுகாப்புடன் முத்துப்பேட்டை வழியாக பேட்டைக்கு வந்தோம். அங்கு ஆர்.எஸ்.எஸ். மெய்யப்பன் அவர்கள் தன் வீட்டில் உணவு தந்தார். சௌந்தர்யா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டோம்.

25.02.2010

காலை முத்துப்பேட்டையில் உண்டி யலடித்துப் பரப்புரை செய்தோம். செம்படவன ;காடு, மகிழங்கோட்டை, தம்பிக்கோட்டை, மேலக்காடு, மரவக்காடு, தாம்பரங்கோட்டை தெற்கு, கருங்குளம், நரசிங்கபுரம் வழியாக அதிராம்பட்டிணம் நுழைந்தோம்.

உண்டியலடித்துப் பரப்புரை செய்தோம.; அங்கு தோழர் தியாகு உரையாற்றினார்.

26.02.2010

ஏரிப்பரக்கரை, இராஜமடம், புதுப்பட்டிணம், மல்லிப் பட்டிணம் வழியாக சின்னமலை வந்தடைந்தோம். மதிய உணவு முடித்து தென்னந்தோப்பு ஒன்றில் ஓய்வெடுத்தோம். மதியம் 3க்கு புறப்பட்டு மனோரா, பிள்ளையார் திடல், நாடியம், சேதுபாவா சத்திரம், மரக ;காவலசை, மருங்கப்பள்ளம், ப+க்கொல்லை வழியாக பேராவ+ரணி நுழைந்தோம். மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தோழர்கள் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். மு. கிருஷ்ணமூர்த்தி திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டோம்.

27.02.2010

மாவக்குறிச்சி, தென்னங்குடி, கீழ்க்கடை, காலகம், கொண்றைக்காடு வழியாக ஒட்டங்காடு வந்தோம். தோழர் அரங்க குணசேகரன், அவர் வீட்டில் பழங்கள், தேநீர் தந்தார். கடைவீதியில் தோழர் பஞ்சநாதன் உரையாற்றினார். பெரிய தெற்குகாடு, கட்டங்காடு வழியாக பாலத்தளி வந்து தென்னந்தோப்பு ஒன்றில் நீர் இறவையில் குளித்து உணவு உண்டோம். சிறு ஓய்வுக்குப் பின் பில்லங்குழி, கழுகப்புலிக்காடு, உதயசூரியபுரம், நடுவிக்கோட்டை வழியாக அதம்பைக்குள் நுழைந்தோம். தோழர் இராமசாமி தமிழ் மீட்பு நிதியத்துக்கு மோதிரம் ஒன்று கொடுத்தார். தன் வீட்டில் இரவு உணவு தந்து தங்க வைத்தார்.

28.02.2010

வலம்பக்கொல்லை, நம்பிவயல், பாதிரங் கோட்டை, மூனுமாங்கொல்லை வழியாக ஊரணிபுரத்துக்குள் நுழைந்தோம.; வேட்டுகள் முழங்க மதிமுக, திமுக, சிபிஐ தோழர்கள் வரவேற்றனர். திமுக இளங்கோ காலை உணவு தந்தார்.

காரியா விடுதி, உஞ்சிய விடுதி, சில்லத்தூர், ஐயணார்புரம், வெட்டிக்காடு, கருங்காப்பட்டி, ஆண்டிப்பட்டி, ஆதனக்கோட்டை, குலாலர்த் தெரு, செல்லம்பட்டி வழியாக கோனகர்நாடு வந்தோம்.

இ.க.க சார்பில் தோழர் முத்து உத்திராபதி தலைமையில் தெருமுனைக்கூட்டம் நடந்தது. தோழர் நாராயணன், தோழர் தியாகுவுக்குக் கதம்ப மாலைபோட்டு வரவேற்புரையாற்றினார். தோழர் பாரதி பேசினார். தோழர் தியாகு விளக்கவுரையாற்றினார். லிட்டில் பிளவர் பள்ளியில் தங்கவைக்கப்பட்டோம்.

01.03.2010

வடக்கூர் தெற்கு, வடக்கூர் வடக்கு, ஈச்சங்கோட்டை, புதுப்பட்டி, அரும்பளை வழியாக மருங்குளம் வந்தோம். தோழர் தமிழ்வேங்கையுடன் பார்வையற்ற ஐந்து தோழர்கள் காத்திருந்தனர். காலை உணவு முடித்து அவர்களோடு நடந்தோம். திருக்கானூர்பட்டி, வல்லம், பின்னைய+ர், திருமலை சத்திரம் வழியாக செங்கிப்பட்டி நுழைந்தோம். கந்தர்வக்கோட்டை சாலையில் த.தே.பொ.க சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. குல. பால்ராஜ், கருணாநிதி உரை யாற்றினர். விழியிழந்த தோழர் க. வீரப்பன் விளக்க உரையாற்றினார். தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

இரவு பயணியர் மாளிகையில் தங்கினோம்.

02.03.2010

முத்தன்பட்டி வழியாக புதுப்பட்டி வந்தோம். இங்கு தோழர் விக்டர் உணவு ஏற்பாடு செய்திருந்தார். பெரியார் புரம,; பூதலூர், கூட நாணல் வழியாக திருக்காட்டுப்பள்ளி நுழைந் தோம். அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் தியாக. சுந்தரமூர்த்தி பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். இரவு உணவும் தங்குமிடமும் அவரே ஏற்பாடு செய்தார்.

கடைவீதிகளில் உண்டியலடித்துப் பரப்புரை செய்தோம். தோழர்கள் தமிழ்வேங்கை (ஐந்திணைப் பாதுகாப்பு இயக்கம்), தோழர் க. வீரப்பன், தோழர் தியாகு ஆகியோர் உரையாற்றினர்.

03.03.2010

பழமானேரி வழியாக காலை உணவுக்கு இளங்காட்டில் இருந்தோம். ஐயா நம்மாழ்வார் வீட்டில் அவரின் அண்ணன் ஓய்வு பெற்ற பொறியாளர் கோ. பாலகிருஷ்ணன் காலை உணவு தந்தார்.

பிள்ளைவாய்க்கால், கச்சமங்கலம், செய்யா மங்கலம், பாதிரக்குடி வழியாக கல்லணை வந்தோம். தோழர் விக்டர் உணவு கொண்டு வந்து கொடுத்தார். இரவு பயணியர் விடுதியில் தங்கினோம்.

04.03.2010

கோவிலடி, திருச்சண்ணம்பட்டி, புதுச் ;சத்திரம், பவனமங்கலம், திருக்காட்டுப்பள்ளி வழியாக மைக்கேல்பட்டி நுழைந்தோம். தோழர் விக்டர் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். தோழர் பாரதி உரையாற்றினார், தியாகு சிறப்புரையாற்றினார். தோழர் விக்டர் இரவு உணவு தந்து கூட்டுறவு வங்கி மாடியில் தங்க வைத்தார்.

05.03.2010

செந்தலை, மணத்திடல், அந்தலூர், நடுக்காவிரி, திருவாலம்பொழில், மேலத்திருப் ப+ந்திருத்தி, கீழத்திருப்ப+ந்துருத்தி, கண்டிய+ர் வழியாகத் திருவையாறு வந்தடைந்தோம். மதிமுக தோழர்கள் சி. சங்கர், பி. ராஜராஜன் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். தோழர் பஞ்சநாதன் உரையாற்றினார். தோழர் தியாகு விளக்கவுரையாற்றினார். இரவு உணவு தந்து வி.என்.எஸ் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

06.03.2010

நடுக்கடை வழியாக அம்மன்பேட்டை வந்தோம். தோழர் மீ. இராமலிங்கம் தன் வீட்டில் காலை உணவு தந்தார். பள்ளியக்காரத்தில் தோழர் பாரதி பேசினார். வெண்ணாற்றங்கரை பக்கத்தில் உள்ள நா.மு. வெங்கடசாமி நாட்டார் கல்லூரி யில் மதிமுக மாணவரணி செயலாளர் விடுதலைவேந்தன் மதிய உணவு வழங்கினார். கரந்தை வழியாக தஞ்சாவ+ருக்குள் நுழைந்தோம். த.தே.பொ.க. ஏற்பாட்டில் சாந்தி திரையரங்கம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விடுதலைச் செல்வன், அரங்க. சுப்பையா, அயனாவரம் முருகேசன், பெ. மணியரசன், தியாகு பேசினார்கள். த.தே.பொ.க. தோழர்கள் இராசுமுனியாண்டி, பழ.ராசேந்திரன் ஏற்பாட்டில் சைலஜா திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டோம். இரவும் மறுநாள் காலை உணவும் அவர்களே ஏற்பாடு செய்திருந்தனர்.

07.03.2010

மாரியம்மன் கோவில், கோவிலூர், குடிக்காடு, ப+ண்டி, சாலியமங்கலம், உடையார் கோவில் வழியாக அம்மாபேட்டை வந்தோம். தோழர் பாரதி உரையாற்றினார், தோழர் தியாகு சிறப்புரையாற்றினார். உடையார் கோவிலில் சி.பாலசுப்பிரமணியம் தன் வீட்டில் தங்க வைத்து உணவு தந்தார்.

08.03.2010

அம்மாப்பேட்டை, திருக்கோவில் பத்து, அருந்தவபுரம் வழியாகச் சூழியக்கோட்டை வந்தோம். திரு பழனிவேல் உணவு தந்தார். சாலியமங்கலம் வழியாகக் களஞ்சேரி வந்தோம். வெண்ணாற்றில் குளித்தோம், தோழர் கரிகாலனின் அக்கா செய்து அனுப்பிய எலுமிச்சை சோறு, தயிர் சோறு உண்டோம். விழிதிய+ர், ரெங்கநாதபுரம், இடையிருப்பு, கரம்பத்தூர், திருக்கருகாவ+ர், நாகலூர், மட்டை யாந்திடல் வழியாகப் பாபநாசம் வந்தோம். குடந்தைத் தமிழ்க் கழகத் தோழர்கள் வரவேற்றனர். இங்கு தோழர்கள் இராமசாமி, தியாகு பேசினார்கள்.

அதிமுக தோழர் சந்தியாகு இரவு உணவு தந்து, துர்கா திருமண மண்டபத்தில் தங்க வைத்தார்.

09.03.2010

காலையில் கவித்தலம் வந்து உண்டிய லடித்துப் பரப்புரை செய்தோம். தோழர் பாரதி பேசினார். மேலக்கவித்தலம், கீழக்கவித்தலம் வழியாக உம்பளப்பாடி வந்தோம். கு.த.க. தோழர் கை. அறிவழகன் காலை உணவு தந்தார்.

இராமானுசபுரம், உமையாள்புரம், அண்டக்குடி வழியாக சுவாமிமலை வந்தோம். இறைநெறி இமயவன் அவர்கள் ஏற்பாடு செய்த உணவைத் தோழர் குமரப்பன் வீட்டில் உண்டோம். சிறிது ஓய்வுக்குப் பின் நாகக்குடி மருத்துவக்குடி, சோழங்க நத்தம், புளியம்பாடி வழியாகத் திருப்புறம்பியம் வந்தோம். தோழர்கள் வீரமுடையான், கலியமூர்த்தி ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் மருதமுத்து, தோழர் தியாகு உரையாற்றினர். இரவு து.கலியமூர்த்தி தன் வீட்டில் உணவு தந்து தங்;க வைத்தார்.

10.03.2010

10 வாளபுரம் ஊராட்சி, ஆலமங்குறிச்சி, கடிச்சம்பாடி, திருநல்லூர், தேவனாஞ்சேரி வழியாக மட்டியூர் வந்தோம். குடந்தைத் தமிழ்க் கழகத் தோழர் செந்தமிழன் தன் வீட்டில் காலை உணவு தந்தார்.

உத்தமதாணி நுழைந்து மதியம் சோழபுரம் வந்து மதிமுக தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த ஜே.பி.எம். திருமண மண்டபத்தில் தங்கினோம். தோழர் இறைநெறி இமயவன் உணவு தந்தார். சிறிது ஓய்வுக்குப் பின் மானம்பாடி, வீராக்கன் வழியாக திருப்பனந்தாள் வந்தோம். வழக்கறிஞர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் மருதமுத்து, தோழர் தியாகு உரையாற்றினர். இரவு உணவு உண்டு பெரியகோவில் மண்டபத்தில் தங்கினோம்.

11.03.2010

பாலூர், குருவாடி, கட்டாநகரம், மணிக்குடி, நரிக்குடி, முட்டக்குடி, இளங்கோனூர், சிற்றிடையா நல்லூர், காமராசபுரம், பிராண விடங்கன், திருமங்கலக்குடி, குறிச்சிமலை, பருத்திக்குடி கல்யாணபுரம், திருவிடைமருதூர், திருப்பணிப்பேட்டை, கோவிந்தபுரம் வழியாக மதியம் 3 மணியளவில் ஆடுதுறைக்குள் நுழைந்தோம். மதிமுக பொதுக்குழு உறுப்பினர் முருகன் மண்டபமொன்றில் தங்கவைத்து உணவு தந்தார்.

மேலமருத்துவக்குடி, திருநீலக்குடி, அந்தமங்கலம், ஆண்டலாம்பேட்டை வழியாக திருநாகேசுவரம் வந்து சேர்ந்தோம். குடந்தைத் தமிழ்க் கழகத் தோழர் வளவன் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்து வரவேற்புரை யாற்றினார். பேராசிரியர் மருதமுத்து, தோழர் தியாகு உரையாற்றினர். தோழர் பேகன் நன்றியுரையாற்றினார். திரு ராசாங்கம் இரவு உணவைத் தன் வீட்டில் வழங்கினார்.

கு.த.க ஏற்பாட்டில் பி.எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் தங்கினோம்.

12.03.2010

காலை தோழர் வளவன் (கு.த.க) தந்த உணவை உண்டுப் புறப்பட்டோம். பார்வையற்ற தோழர்கள் க. வீரப்பன், ஆறுமுகம், மா. சக்திவேல், சி.சக்திவேல், தனகோட்டி ஆகியோர் திருநாகேசுவரத்துக்கு வந்து இணைந்து கொண்டனர். அண்ணாநகர், சினிவாசநல்லூர், கோமளவள்ளிப்பேட்டை, முத்துப்பிள்ளை மண்டபம் வழியாக குடந்தைக்குள் நுழைந்தோம். மதிமுக தோழர் குமார் வீட்டில் மதிய உணவு உண்டோம். பாலக்கரை அருகில் இந்திராணி திருமண மண்டபத்தில் தங்கி சிறிது ஓய்வெடுத்தோம். மாலை 5 மணியளவில் குடந்தைப்பள்ளி ஒன்றில் தீக்கிரையான 94 குழந்தைகளின் நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செய்துவிட்டு காந்தி ப+ங்காவுக்கு வந்தோம். அங்கிருந்து குடந்தைத் தமிழ்க் கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்த பறை இசை முழக்கத்தோடு மகாமகக்குளம் வந்து சேர்ந்தோம்.

தோழர் பேகன் முன்முயற்சியில் குடந்தைத் தமிழ் அமைப்புகள் சார்பில் நெடுநடைப் பயண நிறைவுநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பறை இசை முழங்க. சிலம்பாட்டத்தோடு பொதுக்கூட்டம் தொடங்கியது.

சமர்ப்பா குமரன், தோழர் தியாகு எழுதிய ‘உப்பு நீரில் கால் நனைந்தோம் உரிமைப் பயணம் நாம் எடுத்தோம்’ என்ற பாடலைப் பாடினார். கி. வெங்கட்ராமன் (த.தே.பொ.க), பேராசிரியர் மருதமுத்து உரையாற்றினர். தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தில் முழுமையாக கலந்து கொண்டவர்கள் என 16 பேருக்கு வைகோ துண்டு போர்த்திச் சிறப்பித்தார். விழியிழந்த தோழர்கள் ஐவருக்கும் பழ.நெடுமாறன் துண்டு போர்த்திச் சிறப்பித்தார். சுதாகாந்தி நெடுநடைப் பயண அறிக்கை வாசித்தார். அப்பொழுது தமிழ் மீட்பு நிதியத்துக்கு தான் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி கொடுத்தார்.

தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணத்தின் தலைவர் தோழர் தியாகு ஏற்புரை யாற்றினார்.

நிறைவாகத் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினர்.

2010 சனவரி 25இல் தொடங்கிய தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம், மார்ச்சு 12இல் குடந்தையில் நிறைவுபெறும் வரை நடந்த மொத்த கிலோ மீட்டர் 1045 ஆகும்.

-தியாகு

Pin It