சூடான சட்டினி சாம்பாரும்

சுவையான பூப்போன்ற இட்டிலியும்

குளிர்ந்த தண்ணீர் இவை போன்ற

தூயநல் சத்தான உணவுகளை

பெட்ரோலிய மூலப் பொருளான

பிளாஸ்டிக் பைகளில் வாங்கிவந்து

இஷ்டமுடன் நாம் உண்ணுகிறோம்

ரசாயனக் கழிவையும் சேர்த்தேதான்

 சீரண உறுப்பும் நம்குடலும்

செவ்விய இரைப்பை இதயமும்

சீரான பணிகளை இழக்கிறதாம்

சிக்கென நோய்கள் பிடிக்கிறதாம்

 தாய்ப்பாலும் விஷம் ஆகிறதாம்

சத்துகள் இதனால் அழிகிறதாம்

நோய்கள் பிறப்பிடம் இப்பைகள்

பயன்பாட்டினை நாம் தடுத்திடுவோம்

 தூக்கிஎறிந்தாலும் இவை மக்காமல்

இனிய மண்ணைக் கெடுக்கிறதாம்

இதை அறிந்தே பிளாஸ்டிக் பயன்பாடு

உடனே அதனைத் தடுத்திடுவோம்

Pin It