www.unep.org

ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் இந்த இணையதளத்தில் உலக அளவிலான தகவல்கள் கவனத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன. இணையத்திலேயே வெளியாகும் இளைஞர்களுக்கான காலாண்டு சுற்றுச்சூழல் இதழான Tunza ஈர்ப்பான மொழியில் தகவல்களை அள்ளித் தருகிறது.

 

www.cseindia.org

 

கோக கோலா, பெப்சி குளிர்பானங்களில் உள்ள நச்சு, 25 ஆண்டுகளுக்குப் பிறகும் போபாலில் உள்ள நச்சு உள்ளிட்ட ஆய்வுகளை வெளியிட்டு பிரபலமான சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் இணையதளம். "டவுன் டு எர்த்" இதழைப் போலவே இந்திய தகவல்கள் மிகுந்தது.

www.sanctuaryasia.com

இந்திய காட்டுயிர்கள், இயற்கை தொடர்பான தகவல்களை கொட்டித் தரும் இணையதளம். நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மையப்படுத்தும் ஒரு பிரிவும், குழந்தைகளுக்கான தனி இணையதளமும், ஏராளமான பிரிவுகளில் செய்திகளையும் கொண்ட இணையதளம்

www.wwfindia.org

 

சர்வதேச அளவிலான இயற்கை பாதுகாப்பு அமைப்பான உலக இயற்கை நிதியத்தின் இந்தியப் பிரிவும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. Panda என்ற இதழையும், காட்டுயிர், புவி வெப்பமடைதல் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு தகவல்களையும் இதில் அறியலாம்.

www.ceeindia.org

 

சுற்றுச்சூழல் கல்விக்காக இந்திய அரசின் நிதியுதவியுடன் ஆமதாபாத்தில் இருந்து செயல்படும் அமைப்பு. பல்வேறு பயிற்சிக் கையேடுகள், விழிப்புணர்வு தகவல்களைக் கொண்ட இணையதளம். குழந்தைகளுக்கு தனியாக kidsgreen என்ற இணையதளத்தை நடத்துகிறது.

www.bnhs.org

 

நாட்டிலேயே பழைமையான, சுயசார்பு கொண்ட, மிகப்பெரிய இயற்கை வரலாற்று ஆராய்ச்சி அமைப்பான பம்பாய் வரலாற்றுக் கழகம் தேசிய அளவிலான தகவல்களைத் தருகிறது. புகழ்பெற்ற புத்தகங்கள், கையேடுகள், சாலிம் அலி பற்றிய தகவல்களை இந்த தளத்தில் அறியலாம்.

 

www.envfor.nic.in/divisions/ee/ee.html

 

தேசிய அளவிலான சுற்றுச்சூழல் தகவல் மையத் திட்டத்தின் (என்விஸ்) தமிழக பிரிவு சுற்றுச்சூழல் செய்திகள், விவரங்களை சேகரித்து தொகுத்து வழங்குகிறது. தமிழகத்தின் சுற்றுச்சூழல், அது சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளை இதில் அறியலாம். என்விஸ் என்ற செய்திமடலும் வெளியாகிறது.

 

www.tnenvis.nic.in

 

 

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் இணையதளம். இதில் தேசிய அளவிலான ஆண்டு சுற்றுச்சூழல் அறிக்கைகள், அடிப்படைத் தகவல்கள், ஓரளவு விழிப்புணர்வுச் செய்திகள் அடங்கியிருக்கின்றன.

 

www.esgindia.org

 

பெங்களூருவைச் சேர்ந்த இந்த தன்னார்வ அமைப்பு அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற பல்வேறு தகவல்களை செயல்முறையாகத் தருகிறது. கருத்தரங்கு பதிவுகள், நிறைய கையேடுகள், குழந்தைகள் பகுதியை உள்ளடக்கியது.

www.cpreec.org

 

சென்னையில் இருந்து செயல்படும் இந்த அமைப்பின் தளத்தில் நீர் சேகரிப்பு, காட்டுயிர்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி நிறைய கையேடுகள், தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

Pin It