அருகுகள் நாம்

அருகுகளாய் நாம்

இந்த மண்ணை நேசித்தபடியே

இந்த மண்ணில் ஆழ வேர் அறிவோம்

இந்த மண்ணை ஆரத் தழுவியபடியே

இந்த மண் மீதே படர்வோம்

 

எங்கள் மண்ணின் இதத்தை

அதன் மீதான எங்கள் பிடிப்பை

இலைகளால் பசுமையாய் பாடுவோம்

 

பிடுங்கி எறியப்படினும்

இந்த மண்ணை நேசித்தபடி, ஆரத் தழுவியபடி

இந்த மண் மீதேதான் காய்வோம்

எரிக்கப்படினும் மண் மீதே எரிவோம்

 

எங்கள் வேர்கள் பசுமை வரும்படியாக

எங்கள் மண் வளமுறும்படியாக

எங்கள் மண்ணிலேதான் மடிந்து வளமாவோம்

 

அருகுகள் நாம்

அறுக்கப்படிணும் முழுதாய் அறுபடோம்

இந்த மண்ணைவிட்டு

அதன் மீதான அன்பைவிட்டு

ஒருபோதும் விடுபடோம்

 

அருகுகள் நாம்.

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.