“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை”
பித்துக்கொள்ளியே!
பிழைக்கத் தெரியாதவன்
பிழைக்கத் தெரியாதவனுக்குச் சொன்ன
அறிவுரை!

அடாவடியால் எய்துவர் மேன்மை!
தடாலடியால் எய்துவர் உயர்வு!
அரம்பத்தனத்தால் எய்துவர் புகழ்!
அழிம்பு வேலையால் எய்துவர் வெற்றி!

தாதா ஆனவன் தலைவன் ஆகலாம்!
தலைவன் ஆனவன் தேர்தலில் நிற்கலாம்!
ஆட்சியைப் பிடிக்கலாம்!
அமைச்சராகலாம்!
ஆட்டிப் படைக்கலாம்!
அள்ளிக் குவிக்கலாம்!

திருக்குறளானால் என்ன,
திருத்தி வாசி

ஒழுக்கத்தின் எய்துவர் கீழ்மை! ஒழுக்கம்
உதறின் அடைவர் உயர்வு.

Pin It