தமிழ்த் தேசம் பல்லாயிரம் ஆண்டுகளாக தனது வேளாண்மை அறிவை தொடர்ச்சியாகக் காப்பாற்றி வந்துள்ளது. ஓடுகின்ற ஆற்றின் குறுக்கே எப்படி அணைகட்டுவது என்பதை ஐரோப்பியர்கள் 1860களுக்குப் பின்னர்தான் தெரிந்து கொண்டனர். 2000 ஆண்டு பழமையான கல்லணை முதல் சமமட்ட கரைகளைக் கொண்ட ஏரிகள்வரை பாசன அறிவை பல நாடுகளுக்கும் வழங்கியவர்கள் தமிழர்கள். விதை சேமிப்பு என்றும் பயிர்பாதுகாப்பு என்றும் எண்ணற்ற மரபு சார்ந்த வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் கணக்கிஙடங்காத அளவில் உள்ளன. உழாமல் செய்யும் சாகுபடி என்ற புதிய முறையை சங்ககாலத் தமிழர்கள் இயல்பாகப் பின்பற்றி வந்துள்ளனர். ‘தொய்யாது வித்திய துளர்படு துடவை’ என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. இந்த வேளாண்மை பற்றிய மரபு அறிவு, மரபாண்மை, பசுமைப் புரட்சியின் வருகைக்குப் பிறகு நமது கைகளைவிட்டுச் செல்லத் தொடங்கியது. விதைகளும், பிற இடுபொருட் களும் கும்பணிகளின் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதன் விளைவு உழவர்கள் தமது தற்சார்பை இழந்து மரபு அறிவையும் இழந்து கும்பணிகளின் கைகளை நோக்கிக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மரபு அறிவை மீட்டுக் காக்க வேண்டிய அரசு மரபுசார் அறிவுக்குப் பூட்டுப் போடும் வாய்ப்பூட்டுச் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மைத்துறையில் நடந்து வரும் சிதைவுகள் மிக அதிகமாக உள்ளன. வேளாண்மையைவிட்டு வெளியேறுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம். இந்தியா விடுதலை பெற்றபோது ஙுற்றுக்கு 80 பேர் வேளாண்மையில் ஈடுபட்டு வந்தனர். இப்போது 50 பேர்களுக்கும் குறைவாகவே வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். நகரமயமாவதில் தமிழகம் முதலிடம் பெறுகிறது. இடுபொருள் விலை பன்மடங்கு அதிகரித்து வருகிறது, விளைபொருள்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. நிலத்தில் இறங்கி வேலை செய்ய ஆட்கள் இல்லை. வேளாண்மை என்பதே ஒரு இழிதொழிலாக மாற்றப்பட்டு வருகிறது. இதைப் பற்றி எல்லாம் எந்தவிதான உருப்படியான மாற்றங்களை¥ம் செய்யாமல் தமிழக அரசு கடந்த சூன் மாதம் 24ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் ஒரு சட்ட வரைவை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சட்ட வரைவு வேளாண்மை குறித்த அறிவை ஒரு குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் பகிர்ந்து கொள்வதை வெளிப்படையாக மறுக்கிறது. தமிழகத்தில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் வேளாண்மை பட்டம் பெற்ற பட்டங்தாங்கிகள் மட்டுமே வேளாண்மை குறித்த அறிவுரையோ, பயிற்சியோ தர வேண்டும். அனுபவம் மூலம் யாரேனும் பெற்ற அறிவைக் கொடுத்தால் இனிமல் அது சட்டப்படி குற்றம்! ‘பாண்டிய நாட்டில் எனது பாட்டிற்கு பிறகு இனிமேல் எவனும் வாய்திறந்து பாடக் கூடாது’ என்று சேமநாத பாகவதர் கூறியதுபோல... இனி யாரும் மூச்சுவிடக் கூடாது.

இந்த வரைவின்படி இனிமேல் சென்னைப் பல்கலைக் கழகம், அல்லது கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் அல்லது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே வேளாண்மை பற்றிய அறிவை உழவர்களுக்குக் கொடுக்க முடியும். அப்படி மீறி யாராவது கொடுப்பார்களேயானால் அவர்களுக்கு முதலில் 5000 ரூபாய் தண்டம் விதிக்கப்படும், அடுத்த முறைக்கு 10000 ரூபாய் தண்டம் , அத்துடன் ஆறு மாதம் சிறை!!  அதுமட்டுமல்ல. வேறு மாநிலத்திலோ, வேறு நாட்டிலோ பல்கலைக்கழகங்களில் படித்த பட்டந்தாங்கி களும் வேளாண்மையைச் சொல்லித்தர முடியாது. இந்தச் சட்டப்படி நமது வேளாண்மை அமைச்சரே கூட வேளாண்மை அறிவை யாருக்கும் வழங்க முடியாது. தமிழகத்தில் வேளாண்மைத்துறையில் விரிவாக்கப் பணியாளர் களாக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். இவர்கள்தாம் பெரும்பாலும் ஊரகங்களில் உள்ள உழவர்களிடம் ‘நவீன வேளாணமை அறிவை’ கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர். ‘எந்தப் பூச்சிக்கு எந்த நஞ்சைத் தெளித்தால் சாகும்’ என்ற அறிவைக் கொண்டு சேர்க்கும் இவர்களில் எத்தனைபேர் வேளாண்மைப் பட்டதாரிகள்? இவர்களின் எண்ணிக்கையும் இன்று குறைந்தவாறு உள்ளது.

இந்தச் சட்டத்தின் நோக்கமானது விழுந்து கிடக்கும் தமிழக உழவர்களைக் கைதூக்கி விடுவதற்காக, அதாவது முறையின்றிப் பரவிவரும் வேளாண்மை அறிவுக் குறைபாடுகளைக் களைவதற்காக, அதாவது தமிழகத்தில் வேளாண்மையை மிகச் ‘சிறப்பாகப் பரப்புவதற்காக’ என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக வேளாண்மை ஆயம் (Agriculture Council) ஒன்று நிறுவப்படும்.  பட்டம் பெற்றவர்கள் இந்த ஆயத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் வேளாண்மை அறிவை வழங்க முடியாது. இந்த ஆயத்தில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியில் துறை என்று பல அரசுத் துறை அதிகாரிகள் இருப்பர், அதுமட்டுமல்ல, வணிகர் ஒருவருக்கும் இடமுண்டு, (one leading agricultural entrepreneur -3(f))) உழவர்களுக்கு மட்டும்தான் இடமில்லை! அது மட்டுமல்ல. 59 பக்கங்களைக் கொண்ட இந்த ஆங்கில ஆவணத்தில் ஓரிடத்தில் கூட உழவர் (farmer) என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்படவில்லை.

உண்மையில் இந்தச் சட்டம் கொண்டு வருவதற்கான காரணங்களை அரசு தெளிவாக விளக்கவில்லை. மிக மேலோட்டமாக வேளாண்மைச் செயல்பாட்டை முறைப்படுத்து வதற்காகக் (to regulate the agricultural practice) கொண்டுவந்துள்ளதாக முன்னுரை கூறுகிறது. இதை ஆதரிக்கின்ற ஒரு சிலர் ‘மருத்துவர்களை முறைப்படுத்துவதற்கு உள்ள சட்டத்தைப் போல இதுவும் வேண்டும்’ என்கின்றனர். முதலில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவம் படித்த மருத்துவர்கள் மருத்துவம் செய்கின்றனர். ஆனால் வேளாண்மையில் ஈடுபடுவோர் வேளாண்மைப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று வேளாண்மை செய்யவில்லை. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் மருஆதுளீத்துறை போலதான் இதுவும் என்பது குதிரைக்கு குர்ரம் என்றால் கழுதைக்கு கர்ரம் என்பதைப் போலாகிவிடும். ஒருவேளை தமிழக அரசு வேளாண் பட்டந்தாங்கிகள்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று சட்டம் செய்துவிட்டு அதன் பின்னர் இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் சரியாக இருக்கும்.

இது ஒருபுறம் இருக்க இந்தச் சட்டத்தின் பின்னணியை நாம் சற்று ஆராய வேண்டும். அண்மையில் அரவம் இல்லாமல் அரங்கேறிய இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முன்முயற்சி (Indo-U.S Agricultural Knowledge Initiative) என்ற திட்டத்தை நம்மில் பலர் மறந்திருக்கக்கூடும். முற்றிலுமாக நமது நாட்டின் நாட்டக (Indigenous) வேளாண்மை அறிவை முற்றிலும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு பெரும் பண்ணைகளை நடத்தக் கூடிய பெரும் முதலீடு பிடிக்கனுகூடிய தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யக்கூடிய திட்டம் அது. இதற்கு முற்றிலும் தடையாக இருப்பது நாட்டக அறிவையும் பரவல்மயமான வேளாண் நுட்பங்களையும் கொண்ட இயற்கைவழி வேளாண் முயற்சிகள். இவற்றை முற்றிலும் துடைத்து எறிந்துவிட்டால் மிக எளிமையாக அமெரிக்க தொழில்மய வேளாண் அறிவை இறக்குமதி செய்துவிடலாம் என்கூது இதற்கான அடிப்படைக் காரணம் என்று வேமீ£ண்மைப் பொருளியல் அறிஞர் தேவிந்தர் சர்மா குற்றம் சாட்டுகிறார். அமெரிக்கத் தொழில்நுட்பங்கள் நமது மண்ணுக்கும் சமூக அமைப்பிற்கும் முற்றிலும் ஒத்துவராத ஒன்று. ஏனெனில் அங்குள்ள வேளாண் நிலப்பரப்பிற்கும் நமக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அங்கு சிறுகுறு உழவர் என்பவர் 200 ஏக்கர் நிலத்தை வைத்திருப்பவராக உள்ளார். அங்கு பயன்படுத்தப்படும் கருவிகளும், எந்திரங்கÓம் மிகப் பெரும் பண்ணைகளுக் கானவை. அவற்றை இங்கு இறக்குமதி செய்வதன் மூலம் சிறுகுறு உழவர்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை.

பசுமைப் புரட்சியின் படுதோல்விக்குப் பின்னர் உழவர்களில் பெரும்பகுதியினர் மாற்றுக்களைத் தேடிய வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு இப்போது செய்திகள் உடனுக்குடன் கிடைக்கின்றன. பல்கலைக் கழகங்களையோ, வேளாண் விரிவாக்க அலுவலர்களையோ அவர்கள் நாடுவது குறைந்துவிட்டது. அத்துடன் பல்கலைக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு மிகவும் குறைந்து வருகிறது. மான்சாண்டோ போன்ற பன்னாட்டு விதை வணிகர்கள், ஃபோர்டு பவுண்ருடசன் போன்றவர்கள்தான் ஆராய்ச்சி களுக்கு நிதி உதவி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேளாண் வணிகம், அதுசார்ந்த ஆராய்ச்சி என்று இந்திய வேளாண்மைப் பொருளியல் புதிய வடிவம் எடுத்துள்ளது. இதற்கு முத்தாய்ப்பாக தமிழக அரசு முந்திக்கொண்டு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. பிற மாநிலங்களில் இன்னும் சட்டங்கள் கொண்டுவரப்படலாம். மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைக்கும் உணவுப் பயிர்களுக்கும் உலகெங்கும் கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ள சூழலிலும் இந்தியாவிலேயே மிக அதிகமான, அதாவது 30க்கும் மேற்பட்ட மரபீனி மாற்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவது நமது கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்க¬லைக் கழகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழகத்தின் வேளாண்மை வரலாறு 5000 ஆண்டுகளுக்கும் முன்பான பழமை கொண்டது. ஆண்டாண்டு காலமாக உழவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொண்ருட வந்துள்ளனர். இன்றைக்குச் சரியாக 120 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா வந்த ஜான் அகஸ்டஸ் வோல்கர் என்பவர் 1889ரீஞி ஆண்டு இந்தியாவிற்கு வந்து தனது ஆய்வை மேற்கொண்டார். அவர் கூறிய கூற்றுகள் நமது வேளாண்மையின் மீதும் நமது உழவர்கள் மீதும் அவர் வைத்திருந்த மதிப்பைக் காட்டுகிறது. தென்னிந்திய உழவர்களுக்கு சொல்லித் தருவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இன்றைய நமது அரசு பாரம்பரிய உழவர்களின் அறிவை© பின்னுக்குத் தள்ளிவிட்டு, பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களை முன்னிறுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். கியூபாவில் பசுமைப் புரட்சியினால் வீழ்ந்துவிட்ட வேளாண்மையை மீட்க பாரம்பரிய உழவர்களை அழைத்துத்தான் ஃபிடல் காஸ்ட்ரோ அவர்கள் தமது நாட்டின் நெருக்கடியைத் தீர்த்துக் கொண்டார். இப்படி பல சான்றுகள் உள்ளன, அதுமட்டுமல்ல. இந்திய அரசியல் சட்டக் கூறு 19 இந்தியக் குடிமக்கள் யாவருக்கும் தமது கருத்துக்களைக் கூறவோ, வெளியிடவோ முழு உரிமை கொடுத்துள்ளது. தான் பெற்ற அனுபவ அறிவை தனது அண்டை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதற்குஆ தடை என்றால் இதை எங்குபோய்ச் சொல்வது?. கிட்டத்தட்ட இது ஆங்கிஙேயர் கொண்டுவந்த வாய்ப்பூட்டுச் சட்டத்திற்குச் சமமானதாக உள்ளது.

இந்தியா ஐநா மன்றத்தின் உயிரியியல் பன்மய மாநாட்டு (Convention on Biological Diversity)  ஒப்பந்தத்தில் கையப்பம் இட்டுள்ள அரசுகளில் ஒன்று. இந்த ஒப்பந்த விதிக் கூறு 18-லூன் கீழ் மரபு சார்ந்த அறிவு, மரபுசார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், மரபுசார் வாழ்க்கை முறை போன்றவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறது, தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டம் உயிரியல் பன்மய மாநாட்டு ஒப்பந்த விதிகளை மீறுவதாக உள்ளது.

இதை எல்லாம்விடக் கொடுமை சட்டமன்றத்தில் இந்தச் சட்ட முன்வரைவைப் பற்றி எவ்வித விவாதமும் நடைபெறவில்லை என்பதுதான். இருநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், இதில் எதிர்க்கட்சியினர் யாரும் இதைப்பற்றிப் பேசவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. ஊடகங்களும் உழவர்களின் அடிப்படையான இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பாராமுகமாக இருந்துவிட்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்கிறது 2000 ஆண்டுக்கு முந்தைய புறநானூறு. உண்ண உணவைக் கொடுத்து உயிர் காக்கும் உழவர்களைக் கைகழுவி விடும் இச்சட்டத்தை வரவிடாமல் தடுக்கவும், மரபுசார் வேளாண்மை அறிவைப் பாதுகாக்கும் புதிய சட்டங்களை உருவாக்கவும் உணர்வுள்ள அனைத்து மக்களும் ஒன்றுதிரள வேண்டும்.

Pin It