பொறுமையோடு கரை.
சீண்டியபடியே
அலை.

***

ஒரே கம்பம்
மாறிப் பறக்கின்றன
கொடிகள்.

***

அமர்ந்து ரசித்த திடல்
எழுந்து நிற்கிறது
கட்டிடமாய்.

***

என்னை விட
அழகாய் தெரியும்
எனது நிழல்.

***

கொடி படரும் ஏணிக்கு
தோள் கொடுக்கும்
சுவர்

Pin It