பெரியார் ‘எழுத்தும் - பேச்சும்’ அடங்கிய ‘குடிஅரசு 1925’ முதல் தொகுதியை ஏற்கனவே கழகம் வெளியிட்டுள்ளது. இப்போது 1926 ம் ஆண்டுக்கான தொகுப்பு தயாராகி வருகிறது. தொகுதியைப் பெற விரும்புகிறவர்கள் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.100க்கான காசோலை/வரைவோலை/பணவிடை மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சுமார் 450 பக்கங்களைக் கொண்ட ரூ.150 விலையுள்ள இந்த நூல் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ், பணம் அனுப்புவோருக்கு ரூ.100-க்கு சலுகை விலையில் தரப்படுகிறது. முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் -பணம் அனுப்பி வைப்பதற்கான கடைசி நாள் 31.8.2005.

செப். 17 ம் தேதி - பெரியார் பிறந்த நாளன்று 450 பக்கங்களைக் கொண்ட ‘குடி அரசு 1926’ (ஜனவரி முதல் - ஜுன் வரை) வெளியிடப்படுகிறது. அப்போதே, முன் பதிவு செய்தவர்களுக்கும் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும். காசோலையாகவோ, வரையோலையாகவோ அனுப்புகிறவர்களும், பணவிடை மூலமாக அனுப்புவோரும் கீழ்க்கண்ட பெயருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தா. செ. மணி (THA.SE.MANI), பெரியார் படிப்பகம் (பேருந்து நிலையம் அருகில்), மேட்டூர்.

குறிப்பு: 1926 - இரண்டாம் தொகுதி - மூன்றாவது வெளியீடாக தொடர்ந்து வெளிவரும்.

Pin It