சேலம் திருமலைகிரி சிவன் மற்றும் பெருமாள் கோயிலில் தலித் உள்ளிட்ட அனைத்து ஜாதி மக்களுக்கும் வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்திட, 144 தடை உத்தரவை திரும்ப பெற்றிட தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலு வலகம் அருகில், 17.03.2015 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நாவரசன் தலைமை தாங்கினார்.

demonstration inSalem 600 copy

தோழர்கள் பி.தங்கவேலு (மார்க்சிஸ்ட்), ஏ. மோகன் (சி.பி.அய்), கோ.மோகனசுந்தரம் (சி.பி.அய்-எம்.எல்.), டேவிட், தி.வி.க., பாவேந்தன் வி.சி.க. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக தலைவர் கொளத்தூர் மணி, தங்கவேல், (சட்டமன்ற உறுப்பினர்-மார்க்சிஸ்ட்), மூ.வீரபாண்டி யன், (சி.பி.அய்), ஏ.எஸ்ஸ்.குமார், (சி.பி.அய்-எம்.எல்.) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட தலைவர் கொளத்தூர் சூரியகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் மேட்டூர் கோவிந்தராஜ், சேலம் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் ஏற்காடு பெருமாள், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆத்தூர் மகேந்திரன், இளம்பிள்ளை நகர செயலாளர் தங்க ராஜ், கழக தலைமைக்குழு உறுப்பினர் மேட்டூர் சக்திவேல் உள்ளிட்ட கழகத்தின் 100க்கும் மேற்பட்ட தோழர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Pin It