அய்தராபாத் பல்கலைக்கழக தலித் மாணவர் ‘ரோகித் வெமுலா’ - பல்கலையின் பார்ப்பன ஜாதிப் புறக்கணிப்புக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டார். இது நிறுவனம் நடத்திய படுகொலை.  இந்த சாவுக்குக் காரணமான மத்திய அமைச்சர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கழக சார்பில் பிப்ரவரி முதல் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதேபோல் தமிழகத்தில் கோரத்தாண்டவ மாடும் தீண்டாமைக் குற்றங்களைக் கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பு:

சென்னை : சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே பிற்பகல் 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி 6.30 வரை நீடித்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.அய். தலைவர் தேஹலான் பாகவி, வாலாஜா வல்லவன் (மா.பெ.பொ.க.), குமரன் (த.பெ.தி.க.), வே.மதிமாறன் (எழுத்தாளர்), செந்தில் (இளந் தமிழகம்), கவின்மலர் (ஊடகவியலாளர்), வழக்கறிஞர்கள் துரை.அருண், திருமூர்த்தி, கிரேசி (தமிழ்நாடு தலித் பெண்கள் விடுதலை இயக்கம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட தலைவர் வேழவேந்தன் நன்றி கூறினார். தமிழ்நாடு தலித் பெண்கள் விடுதலை இயக்கத்தைச் சார்ந்த பெண்கள், ஜாதி ஒழிப்புப் பாடல்களைப் பாடினர்.

மேட்டூரில் : சேலம் (மேற்கு) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்  01-02-2016 மாலை 4.00 மணிக்கு மேட்டூர் அணை, தந்தைபெரியார் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.  சேலம் (மேற்கு) மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சார்ப் அ. முரளி  (நிறுவனத் தலைவர், மண்ணின் மைந்தர்கள்), மா. சிவக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி),  சிவராமன் (ஆதித்தமிழர் பேரவை), தேவி (அனைத்திந்திய மாதர் சங்கம்), ச. நாகராஜ் (தமிழ்நாடு மாணவர் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

திருப்பூரில்  : மாலை 5 மணியளவில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் கழக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கழகப் பொருளாளர் துரைசாமி  தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முகில்ராசு முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் நீதிராசன், மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, அகிலன், கவிஞர் கனல்மதி, தனபால், பரிமளராசன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். பிரசாந்த் நன்றி கூறினார்.

கிருஷ்ணகிரியில் : கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 5.00 மணிக்கு தொடங்கியது. மாவட்ட அமைப்பாளர் இராஜேஷ் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நீலகிரி குமார், மாவட்ட துணை செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்ட துணை தலைவர் நீலகிரி கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் கிரி, எல்லப்பன் கண்டன உரையாற்றினர். பிரேம்குமார் நன்றி கூறினார்.

பள்ளிபாளையம் : 1.2.2016 மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட கழக சார்பில் பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முத்துபாண்டி (மாவட்ட பொருளாளர் தி.வி.க.) தலைமை தாங்கினார். மா. வைரவேல் (மாவட்ட அமைப்பாளர்) முன்னிலை வகித்தார்.

மு. சரவணன் (மாவட்ட செயலாளர்), மு. சாமிநாதன் (மாவட்டத் தலைவர்), இரா. செல்வகுமார் (ஆதித் தமிழர் பேரவை), ஆ. ஆதவன் (தமிழர் படை), செந்தமிழன் (தமிழ்புலிகள்),  பெரியண்ணன் (மல்லை ஒன்றிய கழகத் தலைவர்), இரா. பிரகாசு (கழக இளைஞரணி செயலாளர்), மாணிக்கம் (புரட்சிகர இளைஞர் முன்னணி), சி. சிவகுமார் (தி.வி.க.), விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர்கள் வே.காமராஜ், செம்மணி, சுடர்வளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கழக நகர செயலாளர் மு.சரவணன் நன்றி கூறினார். 50க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

மன்னையில் : திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நடை பெற்றது.  ஆர்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், எஸ்டிபிஐ கட்சி தொகுதி தலைவர் முகமது அலி, மதிமுக மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன், நகர செயலாளர் சன் சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் துரை.அருள்ராஜன், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செய்தி தொடர்பாளர் நெடுவை சுரேஷ், மாற்றத்திற்கான மக்கள் களம் அமைப்பாளர் திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன், அமைப்பாளர் சிமா மகேந்திரன், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி பொறுப் பாளர்கள் ஆரோக்கிய பிரகாஷ், வினோத், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் தங்கவேலு, மமக மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட அமைப்பாளர் பாரி ஆகியோர் கண்டனஉரையாற்றினர்.

(மற்ற ஊர்களில் நடந்த ஆர்ப்பாட்டம் அடுத்த இதழில்)

Pin It