மறைந்த சுயமரியாதை சுடரொளி அணைக்கரை டேப் ஆ. தங்கராசன் அவர்கள் திராவிடர் கழக ஊர்வலங்களில் இராவணன் வேடமணிந்து, பெரியாரை வாழ்த்தி எழுப்பிய முழக்கங்கள் இவை. கழகத் தோழர்கள் ஊர்வலங்களில் பயன்படுத்தும் நோக்கத்தோடு இதை வெளியிடுகிறோம்.

பார்ப்பன இன இறுமாப்பையும் அடக்கியே

பார்த்தவ ரெமது பெரியார் - வாழ்க

மடமையை நீக்கிநீ மனிதனாய் வாழதன்

மானங்கொள் என்ற பெரியார் - வாழ்க

மனிதனாய்ப் பிறந்தநீ மனிதர்க்கே உதவிடும்

மார்க்கங்கா ணென்ற பெரியார் - வாழ்க

அடிமையைப் போக்கிபொது உடமையைக் காணநீ

ஆசைப்படு என்ற பெரியார் - வாழ்க

நரகமும் மோட்சமும் தரகர்கள் பொய்க்கதை

நம்பாதே என்ற பெரியார் - வாழ்க

உடமையைப் பாழாக்கிக் கடவுளைக் காணநீ

ஓடாதே என்ற பெரியார் - வாழ்க

பெண்ணின விடுதலைக் கெண்ணியே உழைத்திட்ட

பெரியாருக்கெல்லாம் பெரியார் - வாழ்க

பிள்ளைபெறு மெந்திரம் இல்லையடா பெண்ணினம்

பெருமையளி என்ற பெரியார் - வாழ்க

விதவையெனுங் கொடுமையினால் பதறுதடா

                                                பெண்ணினம்

விடுதலைசெய் என்ற பெரியார் - வாழ்க

திருமணம் என்பது இருமணம் ஒன்றிடும்

செயலடா என்ற பெரியார் - வாழ்க

பொன்னிலும் பவுனிலும் மின்னிடும் நகைசெய்து

பூட்டாதே என்ற பெரியார் - வாழ்க

பூட்டுவ தாலேழை வீட்டில்வாழ் பெண்களும்

புலம்புது என்ற பெரியார் - வாழ்க

குக்கலும் நக்கிடும் குழவிக்கல் உருளைக்குக்

கோயிலேன் என்ற பெரியார் - வாழ்க

கூப்பிகை நின்றுநீ பார்ப்பானை அழைத்ததைக்

கொடுப்பதேன் என்ற பெரியார் - வாழ்க

பக்குவம் பெற்றநல் மக்களைக் காணநீ

பள்ளிவை என்ற பெரியார் - வாழ்க

பள்ளிகள் வைத்தால்தான் பிள்ளைகள் பெற்றிடும்

பகுத்தறிவு என்ற பெரியார் - வாழ்க

சக்கிலி மாடனும் சங்கிலிக் கருப்பனும்

சாமியா என்ற பெரியார் - வாழ்க

சாமியும் சாதியும் சண்டைக்கு வித்ததை

தகர்த்திடு என்ற பெரியார் - வாழ்க

சிக்கனம் அதைவிட முக்கியம் எதிர்கால

சேமிப்பு என்ற பெரியார் - வாழ்க

நடமாடும் தெய்வத்தின் இடர்பா டொழிப்பதே

நன்மார்க்க

மென்ற பெரியார் - வாழ்க.

- சுயமரியாதை சுடரொளி டேப் தங்கராசன்

Pin It