• நமது தாய் மதமாகிய சைவத்துக்கும் வைணவத்துக்கும் எல்லோரும் திரும்புவோம். - சீமான்

அப்போ இனிமேல் கறி, மீன் எல்லாம் சாப்பிடக் கூடாதா அண்ணே!

• என்னை ‘பாசிஸ்ட்’ என்று எவனாவது சொன்னால் செருப்பால் அடிப்பேன். - சீமான்

அண்ணே, கோபிச்சுக்காதீங்க... இதுக்குப் பேர் தான் அண்ணே பாசிசம்.

• நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் தோற்றதால் நாங்களே கவலைப் படவில்லையே, உனக்கு ஏன் பதட்டம்? - சீமான்

நீங்க எப்போதுமே கவலைப்படாமல் ‘சந்தோஷமாக’ இருக்கணும்ங்கிற ஆசையினால்தான் அண்ணே!

• என்னுடைய கோத்திரம் சிவகோத்திரம்; மதம் சைவம். - சீமான்

அப்படியே ஜாதி, பிறந்த நட்சத்திரம், லக்கனம் எல்லாம் சொல்லிடுங்கண்ணே! பஞ்சாங்கத்துலே பார்த்து, ‘தமிழ்த் தேசியம்’ கிடைக்குமா கிடைக்காதான்னு தெரிஞ்சுக்கிறதுக்கு வசதியா இருக்கும்.

• வரலாற்றிலே திராவிடத்துக்கு வந்த முதல் எதிரி நான் தான்; அதனால் தான் நடுங்குறாங்க... - சீமான்

அச்சச்சோ... இந்த வரலாற்று நாயகனின் அருமை புரியாம பஞ்சாயத்துல ஓட்டுப் போட மாட்டோம்னு மக்கள் அடம் பிடிச்சாங்களே, அண்ணே, அத நினைச்சா தான் துக்கம் தொண்டையை அடைக்குது!

• இஸ்லாமும் கிறிஸ்தவமும் வெளிநாட்டு மதங்கள்; நமது மதங்கள் அல்ல. - சீமான்

அதுக்காக நீங்க போட்டிருக்கிற பேண்ட் சட்டையை கழட்டி விட்டு, மர இலை தலைகளை சுற்றிக் கொண்டு இது தான் தமிழர் அடையாளம் என்று மட்டும் சொல்லிடாதீங்க பிளீஸ்...

Pin It