பண்பாட்டுத் தளத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு எதிரான விரிந்த மேடை ஒன்று உருவாக்கப்பட்டு, அதற்கு ‘சரிநிகர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மதம், சாதியத்துக்கு எதிராக, தமிழக பண்பாட்டு வரலாற்றின் முற்போக்கான பாரம்பர்யத்தை வலுவுடன் முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘சரிநிகர்’ செயல்படும்.

இது தவிர, மொழி சமத்துவம், பெண் சமத்துவம் ஆகியவற்றையும் வலியுறுத்தி புத்தகங்கள், ஒலிப் பேழைகள், குறும்படங்கள், உரைகள், நாடகங்கள், பிற கலை வடிவங்கள், கருத்தரங்குகள், சமூக வலைத் தள செயல்பாடுகள் என பன்முகப்பட்ட வடிவங்களில் சரிநிகர் பயணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சரிநிகர் தொடக்க நிகழ்வு மார்ச் 5ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் எழும்பூர் இக்ஷா அரங்கில் நிகழ்ந்தது. பேராசிரியர் அருணன் தலைமையில் எ°. ரவிக்குமார், அ. மார்க்ஸ், மனுஷ்ய புத்திரன், முனைவர் அரசு, வழக்குரைஞர் அருள்மொழி, ஓவியா, பூவுலகின் நண்பாகள் சுந்தர்ராசன், விடுதலை இராசேந்திரன், ஆழி. செந்தில்நாதன், எழுத்தாளர் ஜவஹர் உரையாற்றினார்கள். எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன் ஒருங்கிணைத்தார்.

mansyaputharan oviya 600

விடுதலை இராசேந்திரன் தமது உரையில், “வேத ஆரியப் பண்பாடே, வெகு மக்கள் மீது இந்துப் பண்பாடாக திணிக்கப்படுகிறது என்ற வரலாற்று உண்மையை மக்களிடம் எடுத்துக் காட்டி வெகு மக்களை சங்பரிவார் வலையில் விழாமல் தனிமைப்படுத்த வேண்டும், ஒடுக்கப்பட்ட இந்து மக்களுக்கான இடஒதுக்கீடு, ஜாதி ஒடுக்குமுறை, தீண்டாமை கோயில் நுழைவு போன்ற உரிமைகளைத் தடுத்து எதிர்த்தவர்கள். ‘இந்து’ மதத்துக்கு உரிமை கோரும் பார்ப்பன சங் பரிவாரங்கள்தான்.

மாறாக இந்த உரிமைகளுக்காக மதத்தை ஏற்க மறுத்தாலும் மக்கள் உரிமைப் பார்வையில் இந்து மக்களுக்காக போராடுவோர் மத மறுப்பாளர்கள் தான் என்ற உண்மை களை எடுத்துரைக்க வேண்டும். மோடி ஆட்சியின் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்க்கும், அதேபோழ்து, தமிழர் சமுதாயத்தில் வாழ்வியலில் பெயர் சூட்டல், திருமணம், வழிபாடு, குடமுழுக்கு, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு, இல்லத் திறப்பு, திதி கொடுப்பது வரை புரோகிதப் பார்ப் பனர்களைக் கொண்டு சமஸ்கிருதப் பண் பாட்டையே வாழ்க்கைப் பண் பாடாக மாறியிருக்கும்.

பண்பாட்டுத் திணிப்புகளை மக்களிடம் சரிநிகர் எடுத்துச் சொல்லி விளக்கிட வேண் டும். அப்போதுதான் சமஸ்கிருத எதிர்ப்புக்கான இயக்கம் முழுமை பெறும்” என்று சுட்டிக் காட்டினார்.

அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தாலி குறித்து ‘புதிய தலைமுறை’ ஒளிபரப்ப இருந்த விவாத நிகழ்ச்சியை மதவெறி சக்திகள் மிரட்டலை யொட்டி நிறுத்திவிட்டது. அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வற்புறுத்தி, மார்ச் 14ஆம் தேதி ‘புதிய தலைமுறை’ நிர்வாக இயக்குனரிடம், ‘சரிநிகர்’ சார்பாக மனு அளிக்கப்பட்டது. தமிழ்ச் செல்வன், அருணன், குமரேசன், வழக்கறிஞர் அருள்மொழி, ஓவியா உள்ளிட்ட தோழர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.

Pin It