தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு. திருவள்ளுவர் ஆண்டுதான் தமிழருக்கான ஆண்டு கணக்கு. இதற்கு மாறாக சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று பார்ப்பனர்கள் தமிழர்கள் மீது திணித்தனர்.

அந்த தமிழ்ப் புத்தாண்டுகளுக்கு 60ஆம் ஆண்டு கணக்குகள் மட்டுமே உண்டு. அதில் ஒன்றுகூட தமிழ்ப்  பெயரே இல்லை. அத்தனையும் வடமொழிப் பெயர்கள்.

60 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலாம் ஆண்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். 60 வயதுக்கு மேல் வாழ்வோரை இந்த வடமொழிப் பெயரை வைத்து வயதைக் கணக்கிட முடியாது.

‘சஷ்டியப்தப்பூர்த்தி’ என்று 60 ஆண்டை பார்ப்பனர்கள் விழாவாகக் கொண்டாடுவதன் நோக்கம் 60க்கு மேல் ஆண்டுகளுக்கு பெயர் கிடையாது என்பதால்தான், சித்திரையில் தொடங்கும் “தமிழ்ப் புத்தாண்டு” என்று பார்ப்பனர்கள் கூறும் 60 ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள்!

01. பிரபவ 31. ஹேவிளம்பி

02. விபவ 32. விளம்பி

03. சுக்ல 33. விகாரி

04. பிரமோதூத 34. சார்வரி

05. பிரசோற்பத்தி 35. பிலவ

06. ஆங்கீரச 36. சுபகிருது

07. ஸ்ரீமுக 37. சோபகிருது

08. பவ 38. குரோதி

09. யுவ 39. விசுவாசுவ

10. தாது 40. பரபாவ

11. ஈஸ்வர 41. பிலவங்க

12. வெகுதானிய 42. கீலக

13. பிரமாதி 43. சௌமிய

14. விக்கிரம 44. சாதாரண

15. விஷு 45. விரோதகிருது

16. சித்திரபானு 46. பரிதாபி

17. சுபானு 47. பிரமாதீச

18. தாரண 48. ஆனந்த

19. பார்த்திப 49. ராட்சச

20. விய 50. நள

21. சர்வசித்து 51. பிங்கள

22. சர்வதாரி 52. காளயுக்தி

23. விரோதி 53. சித்தார்த்தி

24. விக்ருதி 54. ரௌத்திரி

25. கர 55. துன்மதி

26. நந்தன 56. துந்துபி

27. விஜய 57. ருத்ரோத்காரி

28. ஜய 58. ரக்தாட்சி

29. மன்மத 59. குரோதன

30. துன்முகி 60. அட்சய

60 வடமொழிப் பெயர்களைக் கொண்ட ஆண்டுகள் எப்படி தமிழ்ப் புத்தாண்டாகும்?

Pin It