வரலாற்றின் போக்கில் நிகழும் தன்னெழுச்சியான எந்த ஒரு எதிர்வினையையும் பொருட்படுத்தாத மேதாவித்தனம் ஷாஜஹானின் கட்டுரையில் இல்லை. கோவை குண்டுவெடிப்பு என்பது 19 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கான தன்னெழுச்சியான எதிர்வினை. மும்பை குண்டுவெடிப்பு குஜராத் படுகொலைகளுக்கான எதிர்வினை. இவற்றை யாரும் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் இவற்றைப் புரிந்துகொள்வது அவசியம். கோவையில் 19 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோ, குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதோ முஸ்லிம்களைக் கூண்டோடு ஒழிக்கும் இந்துத்துவ பயங்கரவாதச் செயல்திட்டத்தின் ஒரு பகுதி.

இஸ்ரேலிய சமூகம் ராணுவமயமாகியிருப்பது ஃபலஸ்தீனியர்களை அழித்தொழிப்பதற்காக. ஃபாலஸ்தீனிய இளைஞர்களும் யுவதிகளும் வெடித்துச் சிதறுவது ஃபலஸ்தீனிய சமுகத்தைக் காப்பாற்றுவதற்காக. இப்படியாக முற்றும் இளைஞர்கள் எதிர்வினையாற்றும் நிலையை ஆதரிக்கும் நோக்கத்துடன் இல்லாமல் அவற்றைப் புரிந்துகொண்டு தடுக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டதே ஷாஜஹான் கட்டுரை.

இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளத் தெரியாத மடையன் அல்ல காசு கண்ணன். கண்ணனது இந்துத்துவ அபிமானம், உலகளாவிய இஸ்லாமியப் பேரபாயம் குறித்து அவரைக் கவலை கொள்ளச் செய்கிறது. அவரது பார்ப்பனத் தன்னிலை, அவர் தன்னை மாணவப் பருவத்தில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தில் (ABVP) (பா.ஜ.கவின் மாணவர் அமைப்பு) ஈடுபடுத்திக் கொண்டது ஆகியவை பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுந்தர ராமசாமியின் மகன் என்பதையே முகவரியாக வைத்து இந்த கார்ப்பரேட் கண்ணன் போடும் ஆட்டம் எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது. அவரது கொட்டத்தை முஸ்லிம்களும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு உலகிலுள்ள அகதிகளில் 70% பேர் முஸ்லிம்கள். உலகெங்கும் கடும் நெருக்கடிக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகியிருப்பவர்கள் முஸ்லிம்கள். அவர்களது உயிர்வாழ்தலுக்கான ஒரு வழியாக ஆயுதப் போராட்டம் அல்லது எதிர் வன்முறை பயன்பட்டு வருகிறது. கென்யா, ஃபலஸ்தீன், ஆஃப்கனிஸ்தான், ஈரான் என்று எத்தனையோ சூழல்களுக்கு இது பொருந்தும். ‘எதிர்க்கிறோம். அதனால் இருக்கிறோம்’ என்பது ஃபலஸ்தீனிய முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாடு முஸ்லிம்களுக்கும் பொருந்தும். இதை விளங்கிக் கொள்ளாத மடமையைத் தோலுரிப்போம். முஸ்லிம் தற்காப்பு அரசியலைக் கேலி செய்யும் பார்ப்பன காலச்சுவட்டை தீயிட்டுக் கொளுத்துவோம்.

(‘காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்’ நூலிலிருந்து)

Pin It