கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழ்நாட்டில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலை தரவேண்டும்; தமிழ் படித்தவர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை தரவேண்டும்; தேர்வாணைய அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

தமிழக அரசு தேர்வாணையத்தை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் 02.12.2017 மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது.

kolathormani 600தமிழக அரசு கடந்த ஆண்டு 2016 நவம்பர் மாதம் அறிவித்த தேர்வாணைய அறிக்கையை திரும்ப பெறக் கோரி கண்டன முழக்கமிட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் கொளத்தூர் மணி, இளந்தமிழகம் செந்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் கரு.அண்ணாமலை, மே 17 இயக்கம் பிரவீன்குமார், மனிதி இயக்கத்தை சார்ந்த செல்வி, எஸ்.டி.பி.அய். தெஹலான் (பாகவி, அம்பேத்கர் மனித நீதி இயக்கம்), பாண்டியராஜன், தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட தோழர்கள் தமிழக அரசு தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அறிவிப்பினை திரும்ப பெறக்கோரி கண்டன உரையாற்றினார்கள்.

கழகப் பொதுச் செயலாளர்கள் தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை வடநாட்டவருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிடக் கோரி தனது கண்டன முழக்கத்தை எழுப்பி உரையை நிறைவு செய்தார். இறுதியாக வேழவேந்தன் (சென்னை மாவட்டத் தலைவர்) நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்

காஞ்சியில் - காஞ்சிபுரம் மாவட்டம் சார்ப்பாக ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் ஐயன்பேட்டை பகுதியில் நடைபெற்றது. கா.ரவி பாரதி (கழக மாவட்ட பொறுப்பாளர்) தலைமை தாங்கினார், மு.ஏழுமலை வரவேற்புரையாற்றினார்.

கண்டன உரையாற்றிய தோழர்கள்  : காஞ்சி அமுதன் (அமைப்பாளர் தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம்), பாசறை செல்வராஜ் (நாடாளுமன்ற தொகுதி செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கொண்டல் (மே 17 இயக்கம்), கோறா ரவி (ஒருங்கிணைப்பாளர் தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம்), ச.மகேஷ் (மாவட்ட இளைஞர் அணி செயலாளர், மதிமுக), வெற்றி தமிழன் (தமிழ்தேச மக்கள் கட்சி), சு.இலங்கவி (மாநில பொதுச்செயலாளர், மாயாவதி தொழிற்சங்கம்), ந.ராமஜெயம் (திவிக), பா.சுரேசு (உழைக்கும் மக்கள் இயக்கம்), டில்லி (பாலாறு பாதுகாப்பு விவசாயிகள் சங்கம்), நன்றியுரை பிரகாசு (திவிக).

திண்டுக்கல் - திண்டுக்கல் மாவட்டம் சார்பாக 1.12.2017 அன்று காலை 10 மணிக்கு கொளத்தூர் ரோடு ரவுண்டானா முன்புற பகுதியில் தமிழர் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை வடநாட்டாருக்கு வாரி வழங்கும் தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட நடந்தது.

கழக மாவட்ட அமைப்பாளர் சு. மருதமூர்த்தி, திண்டுக்கல் மாநகர அமைப்பாளர் செல்வராஜ், ஒட்டன்சத்திரம் ஒன்றியம் அமைப்பாளர் தங்கவேல், பழனி நகரத் தலைவர் எம். கார்த்தி, பழனி நகரச் செயலாளர் முத்துக்குமார், பழனி ஒன்றிய துணைத் தலைவர் எம். துரையன், கடத்தூர் ஐயப்பன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செய்தி தொடர்பாளர் சு.பொதினி வளவன், மாவட்ட துணைச் செயலாளர் பாவேந்தன், நகரச் செயலாளர் மணவாளன், பேச்சாளர்கள் ஆதி, அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

(கடும் மழை காரணமாக ஏனைய ஊர்களில் ஆர்ப்பாட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது)