தஞ்சையிலுள்ள அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறையும் ‘ரிவோல்ட்’ அமைப்பும் இணைந்து மூன்று நாள் பன்னாட்டு மாநாட்டை ஆகஸ்டு 23, 24, 25 தேதிகளில் நடத்தியது. ‘ஊடகங்களில் பகுத்தறிவு மற்றும் சமூக நீதியின் வேர்களைத் தேடி’ எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், சூழலியாளர்கள் பங்கேற்றுப் பேசினர்.

முதல் நாள் : ஆகஸ்டு 23 முதல் நாள் காலை அமர்வுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பசு. கவுதமன் வரவேற்புரையாற்ற பேராசிரியர் ந. முத்துமோகன் முதன்மை உரையாற்றினார். பேராசிரியர் மு. நாகநாதன், புலவர் செந்தலை கவுதமன், இரா. எட்வின், சுப. குணராசன், முனைவர் தமிழ் காமராசன், சூழலியல் ஆய்வாளர் நக்கீரன் உரையாற்றினர். மனித நேயர் எஸ்.எஸ். ராஜ்குமார், ஆய்வு விமர்சனத்துன் நெறிப்படுத்தினார்.

kolathoormani 600இரண்டாம் நாள் : அமர்வில் மருத்துவர் ஷாலினி, ‘பெரியாரின் பெண்ணியம்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் இந்திரா, அமந்தா, ஓவியா, அன்பு மொழி ஆகியோர் ‘பெரியார் பார்வையில் பெண்ணியம்’ குறித்துப் பேசினர்.

‘திராவிடர் கருத்தியலும் தமிழ் இலக்கியமும்’ எனும் தலைப்பில் நிகழ்ந்த இரண்டாம் அமர்பில், பொ. வேல்சாமி, முனைவர் தெ. வெற்றிச் செல்வன், முனைர் இரா. சுப்ரமணியம், பேராசிரியர் மணி, கோ. பன்னீர் செல்வம், பேராசிரியர் இரா. காமராசு, பேராசிரியர் வீ. அரசு உரையாற்றினர். மாணவர்களின் குறும்படங்கள், ஆய்வுப் படங்கள் திரையிடப்பட்டன.

மூன்றாம் நாள் : ‘பெரியார்-கலை பண்பாட்டுத் தளத்தில்’ என்ற தலைப்பில் நடந்த மூன்றாம் நாள் அமர்வில் கோவை இராம கிருட்டிணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சரோன்பென்னி, சீனி. விடுதலை அரசு உரையாற்றினர். டிரஸ்கி மருது வெளி நாட்டிலிருந்து கானொளி வழியாக பேசினார். 

‘அறியப்படாத பெரியாரின் தத்துவப் பெருவெளியில்’ என்ற தலைப்பில் நடந்த அமர்வில் எழுத்தாளர் பாமரன், இரா. கண்ன் (அய்.நா. அமைப்பின் அரசியல் ஆலோசகர்) உரையாற்றினர். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம் தலைமை தாங்கினார்.

Pin It