திராவிடர் கழகத்தில் துடிப்புடன் பணியாற்றியவரும் அந்தக் கழகம் நடத்தும் ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ இதழ்களின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்ட பெரியார் குடும்பத்தைச் சார்ந்த ‘பெரியார் சாக்ரடீஸ்’ விபத்தில் இளம் வயதில் மரணமடைந்தார். அவரது பெயரால் நினைவு விருதுகளை அவரது நெருக்கமான தோழர்கள் அஜயன் பாலா, நாச்சிமுத்து மற்றும் தோழர்கள் வழங்கி வருகின்றனர்.  

இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா ஆகஸ்டு 6ஆம் தேதி மாலை சென்னை கவிக்கோ அரங்கில் நடந்தது. ‘மஞ்சள்’ நாடகத்துக்கு சிறப்பாக உரையாடல் எழுதியவரும், ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியருமான ஜெயராணி, ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டன.

koolathori mani dhivya bharathi 600ஜாதி வெறியர்களின் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் காரணமாக தலை மறைவாக இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருந்த திவ்ய பாரதி நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை. இந்த இரு இளம் தோழியர்களின் ஜாதி ஒழிப்பு செயல்பாடுகளையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில துணைப் பொதுச் செயலாளர் மகேந்திரன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், அய்.நா.வில் பணியாற்றி வருபவரும், ‘அண்ணா’ வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவருமான திராவிடர் இயக்கத்தைச் சார்ந்த கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று உரை யாற்றினர்.

விழாவில் பெரியார் சாக்ரடீஸ் குடும்பத்தினரும் கலை, இலக்கியத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.  

Pin It