periyar04மகாத்மா கூறுகிறார் என்றோ, மகான் கூறுகிறார் என்றோ, சாஸ்திரம் கூறுகிறது என்றோ, கடவுள்கள் சொன்னார்கள் என்றோ நீங்கள் ஏமாந்து போய்விடக் கூடாது.

அந்த மகான்களும் அவர்களின் சாஸ்திர புராணங்களும் அந்தக் காலத்திற்குத் தேவையாயிருந்திருக்கலாம். அவற்றை நம்ப வேண்டுமென்ற கட்டாயமும் அந்தக் கால மக்களுக்குப் பொருத்தமாய் இருந்திருக்கலாம்.

ஆனால், இந்தக் காலத்திற்கு அவை பயன்படக்கூடியவை அல்ல. அவற்றை நம்பி அவற்றின் படி நடப்பது முட்டாள்தனமாகும். அப்படிச் செய்வது, போன வருடத்திய ‘இரயில்வே கைடை ' - கால அட்டவணையைக் கொண்டு - இந்த வருடம் ரயிலுக்குப் போவதை ஒக்கும்.

அப்படிச் செல்லாதவைகளாகிவிட்ட அவற்றை நம்பினால், ஏதாவது பலன் இன்று கிடைக்குமா? அந்த சாஸ்திர புராணங்களுக்குக் கட்டுப்பட்டு நீ ‘என்னாங்கோ எஜமானே’ என்றால், அவன் ‘ஏண்டா பறப்பயலே’ என்கிறான். அதை விட்டு, ‘நான் ஏன் சூத்திரன், நீ ஏன் பிராமணன் ?’ என்று கேட்டு வருவதுபோல், ‘நான் ஏன் பறையன், நீ ஏன் எஜமான்?’ என்று கேளுங்கள். அவன் வழிக்கு வருகிறானா இல்லையா பாருங்கள்.

‘விடுதலை’ 29.2.1948

- பெரியார்

Pin It