நாமோ இன்னமும், பூமாதேவி - அண்டசராசரங்களையும், ஆதிசேஷன் தாங்குவது - இரண்யாட்சன் பூலோகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் ஒழித்துவிட்டது போன்ற கதைகளை, புண்ணிய கதைகள் என்று நம்புவதும், இந்த நம்பிக்கைக்கு ஏற்றபடியான பூஜைகள் செய்வதும், திருவிழாக்கள் நடத்துவதுமாகக் காலம் தள்ளுகிறோம்...

மேனாட்டினரின் ஆராய்ச்சியின் பலன்களை அனுபவிக்கிறோமே, அப்போதாவது அறிவுக்கு வேலை தருகிறோமா? - அந்த ஆராய்ச்சியாளர்கள் அளித்த அருமையான சாதனங்களை உபயோகித்துக் கொண்டே, அந்த ஆராய்ச்சியாளர்களெல்லாம் ஆத்மார்த்தம் அறியாதவர்கள் என்று நையாண்டியும் செய்கிறோம்! நியாயமா?

21.12.47 ‘திராவிட நாடு’

Pin It