தமிழ்நாட்டில் மக்கள் விரோத அமைப்பாக பார்ப்பனர்களுக்கான கட்சியாகவே காங்கிரஸ் இருந்தது. சுயமரியாதை இயக்கம் காங்கிரசின் தமிழின விரோதப் போக்கை மக்கள் மன்றத்தில் தோலுரித்தது. காங்கிரஸ் கட்சியில் சுயமரியாதை இயக்கத்தை 'தரம் தாழ்ந்த' மொழிகளில் பேசி வந்தவர் சத்தியமூர்த்தி எனும், காங்கிரசுப் பார்ப்பனர்; அவரது பெயர் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கும் சூட்டப்பட்டிருக்கிறது. வர்ணாஸ்ரம வெறியில் ஊறிப் போன சத்தியமூர்த்தி கோயில்களில் பெண்களை தேவதாசிகளாக்கும் கொடுமையை ஒழிக்க சட்டம் வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்தவர். இது ஒரு உதாரணம் தான். அவ்வளவு மோசமான வைதீக வெறியர்.

இந்தப் பார்ப்பனரைப் பற்றி குத்தூசி குருசாமி ஒரு முறை 'குடிஅரசு' ஏட்டில் ஒரு நையாண்டி கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு "அழுகிய முட்டை அரை அணாவுக்கு ஆறு" என்பதாகும். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். "முட்டையால் அடிப்பதால் மனிதன் செத்துவிட மாட்டான். அதற்காக இயக்கத்தவர்கள் எவரையும் முட்டையால் அடித்துப் பார்க்க வேண்டாம். நல்ல முட்டைகளை வீணாக்கக் கூடாது. அப்படியானால் அழுகிய முட்டையால் அடிக்கலாம் என்று எண்ணி அடித்து விடாதீர்கள். நான் சொன்னால் நீங்கள் கேட்கவா செய்வீர்கள்? நீங்கள் செயல்வீரர்களாச்சே? எப்படி இருந்த போதிலும் சத்தியமூர்த்தியை அடித்து விடாதீர்கள். இயக்க வளர்ச்சியைக் கண்டு பயத்தில் ஏதோ உளறுகிறார்". - என்று எழுதினார்.

அடுத்த இரண்டு நாட்களிலேயே புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி பேசியபோது இயக்கத்தவர்கள் அழுகிய முட்டையால் அடித்தே விட்டார்கள் அய்யரை. செய்தி அறிந்த இளங் குத்தூசி, "அண்ணா முதுகு எப்படி இருக்கிறது" என்று மீண்டும் கிண்டலாக எழுதினார். குத்தூசி குருசாமியின் வரலாற்று ஆசிரியர் குருவிக்கரம்பை வேலு தனது நூலில் - இதைப் பதிவு செய்துள்ளார்.

சத்திய மூர்த்தியின் காலத்துக்கு மீண்டும் தமிழக காங்கிரசார் திரும்பியுள்ளனர். அதே பார்ப்பனக் குரல், காங்கிரஸ் முகாமிலிருந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

Pin It