பெரும் தொழில் நிறுவனங்களை நடத்தும் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு 2005-2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு தள்ளுபடி செய்த வரியைக் கணக்கிட்டால் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு ரூ.7 மில்லியன்!

தங்கம்-வைரத்துக்கு தள்ளுபடி செய்துள்ள வரி கடந்த 36 மாதங்களில் ‘2 ஜி’ அலைவரிசை ஊழலுக்கு சமம்.

2005-லிருந்து 2013 வரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வருமான வரி, சுங்க வரி, ‘கஸ்டம்ஸ் டூட்டி’ ரூ.31,111,69 (ரூபாய் 31 லட்சத்து 111 ஆயிரத்து 69 கோடி ரூபாய்)(2005 ஆம் ஆண்டிலிருந்து,  2013 ஆம் ஆண்டுக்குள் தள்ளுபடி விகிதம் 130.53 சதவீதம் அதிகரிப்பு)

தங்கம், வைரம் மற்றும் நகைகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.3,14,456 கோடி.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இவ்வளவு பெரும் தொகையை தள்ளுபடி செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவில் தனி நபர் நேரடி வருமான வரி 5.5 சதவீதமாகவும், மறைமுக வருமான வரி 4.4 சதவீதமாகவும் மிக மிகக் குறைவாகவே உள்ளது என்றும் கவலைப்படுகிறார். தள்ளுபடி பற்றி அவர் கவலைப்படவில்லை! நாட்டை “தேசபக்தர்கள்” கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விட்டார்கள்!

(ஆதாரம்: ‘இந்து’ மார்ச் 16 இதழில் சாய்நாத் கட்டுரை)

Pin It