மத்திய அரசுத் துறைகளில் உள்ள 149 அரசு செயலாளர் என்ற உயர்மட்டப் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர்கூட இல்லை என்பதை மத்திய அமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்றத்தில் தெரிவித்த புள்ளி விவரங்களை  தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏடு வெளியிட்டுள்ளது.

அரசு உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோரும் பழங்குடியினத்தவரும் எந்த அளவில் இடம் பெற்றிருக்கின்றனர் என்று பார்த்தால், 149 உயர் அரசு செயலாளர் அளவிலான பதவிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர் ஒருவர்கூட இல்லை என்பதே இன்றுள்ள நிலை. பழங்குடி யினத்தைச் சேர்ந்த 4 பேர் மட்டுமே இந்த நிலை பதவிகளில் உள்ளனர் என்று பிரதமர் அலுவலக விவகார அமைச்சர் நாராயணசாமி பதிலளித் துள்ளார்.

அடுத்த அளவில் கூடுதல் செயலாளர் பதவி களில் உள்ள 108 அதிகாரிகளில் வெறும் 2 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். 477 இணைச் செயலாளர்களில்

31 பேர் தாழ்த்தப்பட்ட பிரிவினர் (6.5 விழுக்காடு), 15 பேர் பழங்குடி யினத்தவர் (3.1. விழுக்காடு),
590 இயக்குநர் பதவிகளில் 17 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள் (2.9 விழுக்காடு), 7 பேர் மட்டுமே பழங்குடியினத்தவர்கள் (1.2 விழுக்காடு).

Pin It