எந்த ஒரு மதத்தின் சார்பாகவும் செயல்படாமல், அனைவரையும் சமமாக அணுகுகிற அரசு, மதச்சார்பற்ற அரசு. ஆனால், நமது நாட்டில் இந்த அர்த்தம் செல்லுபடியாகவில்லை. இங்கே ‘ஹிந்து மதத்தைத் தவிர, மற்ற மதங்களை எல்லாம் போற்றி, அவர்களுக்குச் சலுகைகள் காட்டி, முடிந்தபோதெல்லாம் ஹிந்து மதத்தை ஒரு இடி இடிப்பது’ என்பது மதச்சார்பற்ற அரசின் உண்மையான விளக்கம். - இவ்வாறு ‘துக்ளக்’ சோ இவ்வார இதழில் (7.11.2012) கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

‘மதச்சார்பின்மை’ என்ற பெயரில் ‘இந்து’ பார்ப்பனியத்தைத் திணிப்பதே உண்மையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை சோ பார்ப்பனர்கள் மறைக்கிறார்கள்! அதனால்தான் -

•              ஊட்டியில் மத்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு “இந்திய போட்டோ பிலிம்ஸ் நிறுவனம்” என்று பெயரிடாமல், “இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம்” என்று பெயரிட முடிந்தது.

•              பெங்களூரில் மத்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு “இந்திய விமானம் கட்டும் நிறுவனம்” என்று பெயரிடாமல் “இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம்” என்று பெயரிட முடிந்தது.

•              விசாகப்பட்டினத்தில் மத்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு “இந்திய விமானம் கட்டும் நிறுவனம்” என்று பெயரிடாமல் “இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம்” என்று பெயரிட முடிந்தது.

•              டில்லியில் மத்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு “இந்திய பெட்ரோலிய நிறுவனம்” என்று பெயரிடாமல் “இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம்” என்று பெயரிட முடிந்தது.

•              இந்திய அரசு வங்கிக்கு (State bank of India) - பாரத தேசிய வங்கி என்று பெயர் சூட்டிக் கொண்டார்கள். இதுதான் பார்ப்பன இந்தியாவின் மதச்சார்பின்மை யோக்கியதை.

‘துக்ளக்’ சோ பார்ப்பனர் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்?

Pin It