தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி

கச்சத் தீவு அருகே, இங்கிலாந்து நிறுவனம் அமைக்கும் பெட்ரோலிய கிணறுகளால், இயற்கை வளம் அழிவதோடு, தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நேர் கிழக்கே உள்ள மன்னார் வளைகுடா பகுதி யுனெஸ்கோ அமைப்பால் கடல்சார் தேசிய பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டு, உயிர்க்கோள் காப்பகமாக பாதுகாக்கப்படும் பகுதி. இங்கு, பல்வேறு அரிய வகை பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன.

எனவே, மன்னார் வளைகுடாவிலுள்ள 20-க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளில் மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நிறுவனம் ஒன்று, 10 ஆயிரத்து 500 சதுர கி.மீ. பரப்பளவுள்ள மன்னார் வளைகுடா பகுதியில், 1750 சதுர கி.மீ. பகுதியை தோண்டி, 450 கோடி ரூபாய் செலவில், மூன்று பெட்ரோலிய கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்நிறுவனம், பூகம்பம் தொடர்பான முப்பரிமாண ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது. அந்நிறுவனம், இந்தியாவில் தொழில் செய்ய, ‘கெய்ர்ன் இந்தியா’ என்றும், இலங்கையில் ஆதரவு பெற, ‘கெய்ர்ன் லங்கா’ என்றும் தனது கம்பெனிக்கு பெயரை வைத்துள்ளது. இரு நாட்டு அரசியல்வாதிகளையும் நமது நிறுவனத்தில் பங்குதாரர்களாக்கி, இந்திய கடல் எல்லையில் கால் பதிக்கிறது.

கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் நுழைந்ததுபோல, ‘கெய்ர்ன் இந்தியா மற்றும் கெய்ர்ன் லங்கா’ என்ற பெயரில் இந்திய - இலங்கை எல்லையில் நுழையும் இந்நிறுவனத்தால், தமிழக கடல் பகுதியின் சூழல் பாதிக்கப்படும். மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் எடுக்கும் முயற்சியில் இந்தியா - இலங்கை நாடுகள் கூட்டாக ஈடுபட வேண்டும் என, 1974 இல் இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தான் கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

ஆனால், மன்னார் வளைகுடாவில் ஒரு பகுதியை எண்ணெய் கிணறு அமைக்க, சீனாவுக்கு குத்தகைக்கு விட்டுள்ள இலங்கை அரசு, இன்னும் மூன்று பகுதிகளைப் பிற நாடுகளுக்கு வழங்க, பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 1974 ஒப்பந்தப்படி, இந்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய எண்ணெய் வளத்தின் லாபத்தை, இரு நாட்டு பெயர்களிலும் நிறுவனம் நடத்தும் இங்கிலாந்து நிறுவனம் சுரண்டப் பார்க்கிறது. இதற்கு, இந்திய எண்ணெய்  இயற்கை எரிவாயு கழகமும் அனுமதி அளித்துள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், எண்ணெய் கிணறுகள் அமைந்தால், இனி, கச்சத் தீவு திசைக்கே தமிழக மீனவர்கள் போக முடியாத நிலை ஏற்படும். இலங்கை மீனவர்களுக்கும் இதேநிலை தான்

Pin It