பொள்ளாச்சியில் ஒரே நாளில் 10,000 கையெழுத்துகள்
கோவையில் மாபெரும் மனித சங்கிலி


போர்க் குற்றவாளி இராஜபக்சேயை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தக் கோரி தமிழகம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. மேட்டூர், பொள்ளாச்சி, சென்னை, மயிலாடுதுறை  நகரங்களில் கையெழுத்து இயக்கத்தை தோழர்கள் தொடங்கியுள்ளனர். கோவையில் கழகத்தின் முயற்சியால் மாபெரும் மனித சங்கிலி நடந்துள்ளது.

போர்க் குற்றங்களை மீறி மனித குலத்தின் அழிவுக்குக் காரணமான இலங்கை அதிபர் இராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நிறுத்தி, அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த இந்திய அரசு அய்க்கிய நாடுகள் சபையை வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஒரு போதும் செயல்படக் கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம் புத்தூர், காந்திபுரத்தில் கழகப் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில் பல்வேறு கட்சிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி போராட்டம் 2.5.2011 மாலை 5 மணிக்கு தொடங்கி 6 மணி வரை மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

மனித சங்கிலிப் போராட்டம், காந்திபுரம், கிராஸ்கட் சாலை, லட்சுமி வணிக வளாகம் முன் பிருந்து, அலங்கார் ஓட்டல் பிரிவு வரை நின்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்றதுடன், இராஜபக்சேவுக்கு எதிராக முழக்கமிட்டனர். “தண்டனை வழங்கு! தண்டனை வழங்கு! போர் குற்றவாளி இராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கு!!”, “பச்சிளம் பாலகர்களை கொன்று குவித்த இராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கு!” என்றும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கழுத்தில் மாட்டியிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் கழக செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, வடக்கு மாவட்டத் தலைவர் இராமசாமி, செயலாளர் வெள்ளமடை நாகராசு, பொறுப்பாளர் சண்முக சுந்தரம், பொருளாளர் மாவீரன் மதியழகன், மாநகர தலைவர் வே.கோபால், மாநகர செயலாளர் இ.மு.சாஜித், மாநகர பொருளாளர் இரா. இரஞ்சித் பிரபு, அலுவலக பொறுப்பாளர் சா.கதிரவன், தெற்கு மாவட்டத் தலைவர் கலங்கல் வேலுச்சாமி, செயலாளர் கா.சு.நாகராசு, துணைச் செயலாளர் சூலூர் பன்னீர் செல்வம், பொருளாளர் அகில் குமாரவேல், தமிழ்நாடு மாணவர் கழகம் பன்னீர்செல்வம், தமிழினியன், நேருதாசு, ம.தி.மு.க. - மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர். மோகன் குமார், புற நகர் மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கிருட்டிணசாமி, தியாகராஜன், கணபதி செல்வராஜ், வக்கீல் சூரி நந்தகோபால், முன்னாள் எம்.பி. கிருஷ்ணன், விவசாய அணி சூலூர் பொன்னுசாமி, அர்ஜுனன், மாமன்ற உறுப்பினர் தங்க வேலு, அற. சண்முகம், விஜய குமார், விடுதலைச் சிறுத்தை கள் கட்சி - மாவட்டச் செய லாளர் சுசி. கலையரசன், கோவை சம்பத், விடுதலை சிறுத்தைகள் தொழிலாளர் முன்னணி -மாவட்ட செய லாளர் மோசஸ், இளைஞரணி செயலாளர் பாலசிங்கம், பாட்டாளி மக்கள் கட்சி - மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆ. தங்கவேல் பாண்டியன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜி.எஸ். குமார், ரமேஷ், மெகராஜு தீன், பூபதி, கணேசன், செல்வம், தங்கவேல், கண்ணப்பன், மனித நேய மக்கள் கட்சி - எம்.எச். அப்பாஸ், டி.எம்.எஸ். அப்பாஸ், பர்க்கத் அலி, அமானுல்லா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் - எம். சுலைமான். நாம் தமிழர் கட்சி - மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச் செல்வன், புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராசு, சோஷியல் டெமாக்ரூரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா - மாவட்ட செயலாளர் என்.கே. அஷ்ரப், மாவட்டத் தலைவர் வி.எம்.அபுதாகிர், தமிழ் தேசிய பொது உடமை கட்சி - தமிழரசன், சங்கர், அருந்தமிழர் பேரவை - இளவேனில், அம்பேத்கர் முற்போக்கு தொழிலாளர் சங்கம் - மகேந்திரன், மதி, தமிழர் விடுதலை இயக்கம் - ஒருங்கிணைப்பாளர் வெண் மணி. ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கரு.மாணிக்கம், களப்பிரர் , தீபா, குப்புராசு, இந்து மக்கள் கட்சி, சட்டக் கல்லூரி மாணவர்கள், அனைத்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்களும், பொது மக்களும் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.

கையெழுத்து இயக்கம் மேட்டூரில்

அய்.நா. மன்றமே! ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த இராஜபக்சே கும்பல் மீது போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மேட்டூர் பேருந்து நிலையத்தில் 9.5.2011 மாலை 6 மணியளவில் தொடங்கி இரவு வரை பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக மாவட்ட தலைவர் செ. மார்ட்டீன், மேட்டூர் நகர தலைவர் அ. அண்ணா துரை, மாவட்ட பொருளாளர் சி. கோவிந்தராசன், நகர பொருளாளர் செ. கணேசன், ஆசைதம்பி, பிரவின் குமார், ஆர்.எஸ். பகுதி தோழர்கள் நாகராசு, இராசசேகரன், அருள்செல்வன், இராமச் சந்திரன், குமரப்பா, தேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சியில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பாக போர்க் குற்றவாளி இராஜபக்சேயை விசாரணை மன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அளிக்கப்படும் மனுவில் இரண்டு கோடி தமிழர்களின் கையெழுத்துகளை திரட்ட உலகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. கழகத்தின் சார்பிலும் கையெழுத்து இயக்கங்கள் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சியில் நகர செயலாளர் வே. வெள்ளியங்கிரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு 8.5.2011 முதல் 15.05.2011 வரை கையெழுத்துகள் திரட்ட திட்டமிடப்பட்டது. அதற்படி 8.5.2011 அன்று பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு கையெழுத்து இயக்கம் தொடங்கியது. முதல் நாளிலேயே 10,000 கையெழுத்துகள் திரட்டப்பட்டன.

இளைஞர்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து கையெழுத்துப் போட்டுச் சென்றனர். இந்நிகழ்வில் மறுமலர்ச்சி தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி, நேதாஜி இளைஞர் பேரவை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழ்நாடு மாணவர் கழகம், தமிழ்நாடு சலவை மற்றும் சவரத் தொழிலாளர் சங்கங்கள், 24 மனை தெலுங்கு செட்டியார் இளைஞர் சங்கம், தமிழ் இளைஞர் பொதுநல மன்றம், த.ஒ.வி.இ., தமிழ் தேசிய விடுதலை இயக்கம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள் பங்கேற்று கையெழுத்துகளை திரட்டினர்.

Pin It