ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு:

யாழ் மருத்துவமனையை இந்திய அமைதி காக்கும் படையினர் சுற்றி வளைத்துள்ளதால் காயமடைந்த வர்களை சிகிச்சைக்குக் கொண்டு செல்ல முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். காயமுற்று மருத்துவமனை யில் இருக்கும் நோயாளிகள் மருத்துவ வசதியின்றி இறக்கிறார்கள். டாக்டர்கள் தாதிகள் உட்பட ஏராளமான மருத்துவமனை ஊழியர்கள் பீதி யினால் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வருகின்றனர். மருத்துவமனையிலும் வெளியிலும் இறந்த பொது மக்களின் பிணங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. நாய்களும் காகங்களும் பிணத்தைக்கொத்தித் தின்னும் அவல நிலை  ஏற்பட்டுள்ளன. யாழ் நகரெங்கும் பிணவாடை வீசுகிறது. சென்ற இடமெல்லாம் இடிபாடுகளாகக் காட்சியளிக்கிறது.

21 ஆம் தேதி நடந்த செல் தாக்குதலில் மட்டும் 100 பொது மக்கள் காயமுற்றுள்ளனர். யாழ் குடா நாட்டில் இதுவரை எப்போதும் ஏற்படாத அளவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

21 ஆம் தேதி மட்டும் 700க்கும் மேற்பட்ட மோட்டார் செல்கள் இந்தியப் படையினரால் ஏவப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இறந்தவர்கள், காயமடைந்தவர்களைத் தூக்கிச் செல்வதற்குக்கூட முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே வீதிகளில் கிடக்கின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவ வசதியின்றி இறந்து கொண்டிருக்கின்றனர்.

யாழ் மருத்துவமனைக்கு அருகில் சண்டை நடப்பதால் டாக்டர்களும், தாதிமாரும் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. யாழ்குடா நாட்டில் இலட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக அவதியுறுகின்றனர்.

(தொடரும்)

Pin It