தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழக சார்பில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்தும் தமிழக அரசை வலியுறுத்தி 2.6.2011 வியாழன் மாலை 5 மணியளவில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். உலக திருக்குறள் பேரவை பொறுப்பாளர் மோ. அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். சுஜித் (பு.இ.மு.), பால்ராசு (பெ.தி.க.), தமிழ்ப் புலிகள் நெல்லை மாயா, மனித உரிமை பாதுகாப்பு மைய பொறுப்பாளர் சு. இராமசந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார், இந்திய பொதுவுடமைக் கட்சி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ. மோகன்ராசு, ஆதித் தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ரா.வே.மனோகர் ஆகியோரது உரைக்குப் பின் கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பால். பிரபாகரன், கல்வியை வியாபாரமாக்கிடும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படக் கூடாது என்றும், அனைவருக்கும் தரமான சமச்சீர் கல்வி வழங்கிடவும், அனைவருக்கும் கல்வியை இலவசமாக்கிடவும் வலியுறுத்தி விளக்கவுரையாற்றினார்.

நிகழ்வில் தூத்துக்குடி மாநகர செயலாளர் பால். அறிவழகன், மாநகர தலைவர் சா.த.பிரபாகரன், மாவட்ட பொருளாளர் க. மதன், மாவட்ட துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், நெல்லை சி.ஆ. காசிராசன், செ.செல்லத்துரை, மாநகர துணைத் தலைவர் ரவிசங்கர் மற்றும் பெரியார் திராவிடர் கழகம், ஆதித் தமிழர் பேரவை, இந்திய பொதுவுடைமை கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள், மனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிறித்துவர் வாழ்வுரிமை இயக்க பொறுப்பாளர் பணி சுந்தரி மைந்தன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள இயலாத நிலையில் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் வெற்றியடைய தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இறுதியில் மாவட்ட செயலாளர் கோ.அ. குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

புலவர் கலியபெருமாள் நினைவேந்தல்

16.5.2011 திங்கட் கிழமை மாலை 6 மணிக்கு கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வானொலி திடலில் புலவர் கு. கலியபெருமாள் நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இப் பொதுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். த.ஒ.வி.இ. பொதுச்செயலாளர் நிலவன், அனைக்கரை மாறன், தமிழ் உரிமை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் கி.த. பச்சை யப்பன் ஆகியோர் முன்னலை வகித்தனர். மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் ஆனைமுத்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் வ. கவுதமன், தமிழர்நீதிக்கட்சித் தலைவர் சுபா. இளவரசன், பா.ம.க. தலைமை நிலைய பேச்சாளர் திருமாவளவன் ஆகியோர் உரையாற்றினர். தமிழ் தேசிய விடுதலை இயக்கம் பஞ்சநாதன் நன்றி கூறினார்.

அடுத்த இதழில்...

பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூலை ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ என்ற பெயரில் தமிழாக்கம் செய்து ‘சவுக்கு’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சென்னையில் 4.6.3011 அன்று இந்த நூலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட, ஊடகவியலாளர் கஜேந்திரன் பெற்றுக் கொண்டார். தோழர் தியாகு, வழக்கறிஞர் புகழேந்தி, நூலாசிரியர் ராஜிவ் சர்மா, சவுக்கு சங்கர், மொழிப் பெயர்ப்பாளர் ஆனந்த் ராஜ் ஆகியோர் உரையாற்றினர். நூலின் உள்ளடக்கத்தை கடுமையாக விமர்சித்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய மறுப்புரை அடுத்த இதழில் வெளி வருகிறது.

Pin It