கி. வீரமணி நடத்துவது மக்களால் நடத்தும் மக்கள் பல்கலைக்கழகமாம்! எனவே வழக்கை சந்திக்க நிதி திரட்ட ஆரம்பித்துவிட்டார்!

ஆமாம்! நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களை சமூகநீதி பல்கலைக்கழகம் என்று கூற முடியாது. காரணம் அங்கு இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயமே இல்லை.

‘மக்களால் உருவாக்கப்பட்ட மக்கள் பல்கலைக்கழகம்’ என்று வசனம் பேசுகிறார். மக்கள் கூட இருக்கட்டும், பெரியார் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கே கறாராக, கட்டணத்தை வைத்தால்தான் அங்கே இடம்.

தமிழகத்தில் ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம்கூட 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற முன்வரவில்லை என்கிறார் அமைச்சர் பொன்முடி!

குடும்ப நிறுவனங்களாக மாற்றிக் கொண்டு, வர்த்தகமாக்கிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டுகிறது மத்திய மனிதவளத் துறை அமைச்சகம்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வீரமணியிடம் எந்த பதிலும் கிடையாது. இப்படி, கல்வியை வணிகமாக்கிக் கொண்டு, வழக்குக்கு நிதியும் திரட்டுகிறார்கள்!

ஏற்கனவே வணிகமாக்கியவர்கள், தடையை வைத்தும் பணம் வசூலிக்கிறார்கள். வெற்றிகரமாக தொழில் நடத்தும் கலைக்கு வீரமணி ஒரு நூலே எழுதலாம். அவ்வளவு தகுதியும் அவருக்கு இருக்கிறது.

- பெரியார் முழக்கம் செய்தியாளர்

 

Pin It