(1) பாடல்கள்:            திருஅருட்பா ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றவை.

(2) பாடல்கள்:           ஆறு திருமுறைகளிலும் சேராதவை.

(3) விண்ணப்பங்கள்:               பெருமான் இறைவனிடத்துச் செய்து கொண்டவை (உரை நடை).

(4) கடிதங்கள்:            பெருமான் தம் கைப்பட எழுதியவை.

(5) கட்டளைகள்:       தாம் நிறுவிய நிலையங்களின் நடை முறைகளைக் குறித்து எழுதியவை.

(6) பத்திரிகைகள்:     சுற்றறிக்கைகளும் அழைப்பிதழ்களும்

(7) உபதேசங்கள்:     உடன் கூட்டத்தாராலும் கேட்டவர்களாலும் எழுதி வைக்கப் பெற்றுள்ள குறிப்புகள்:

(8) உரைநடை: 1. மனுமுறைகண்ட வாசகம். 2. ஜீவகாருண்ய ஒழுக்கம்.

(9) நூல்கள்:

(1) 'தமிழ்' என்ற சொல்லுக்கு வரைந்த உரை.

(2) பெரிய புராணம் முதற் பாடல் முதற் சொல்லாகிய ‘உலகெலாம் என்பதற்கு வரைந்த விளக்க உரை.

(3) ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி.

(4) தொண்டமண்டல சதகத்தின் நூற்பெயரிலக்கணமும், கடவுள் வாழ்த்துப் பாடலுக்குச் செய்த உரையும்.

(5) பொன்வண்ணத் தந்தாதியின் இருபத்திரண்டாம் பாடலுக்குச் செய்த உரை. வேதாந்த தேசிகரின் குறட்பா ஒன்றுக்கு வரைந்த உரை.

(10) பதிப்பித்த நூல்கள்:

1. ஒழிவிலொடுக்கம் (1851)

2. தொண்டமண்டல சதகம்(1855)

3. சின்மய தீபிகை(1857)

(11) பிற         - மருந்துச் சரக்குகளின் குண அட்டவனை முதலியன.

பெருமானின் அருளிச் செயல்கள் அனைத்தும் அச்சிடப் பெற்று நூல்களாக வெளிவந்துள்ளன.

திருஅருட்பா ஆறு திருமுறைகளும் இரண்டு தொகுதிகளாக (இரண்டு புத்தகங்களாக) அச்சிடப்பெற்று வழங்கி வருகின்றன. முதல் ஐந்து திருமுறைகள் ஒரு தொகுதி, ஆறாம் திருமுறை ஒரு தொகுதி, ஆக இரண்டு புத்தகங்கள்.

உரைநடை அருளிச்செயல்களில் சில ஐந்து திருமுறைத் தொகுதியிலும், சில ஆறாம் திருமுறைத் தொகுதியிலும் சேர்க்கப் பெற்று வழங்கின. அப்படியும் உரைநடைப்பகுதி அனைத்தும் முழுமையாக, முறையாக வெளிவராதிருந்தன. இது முன்னைய நிலை. உரைநடை ஆக்கங்கள் அனைத்தையும், "திருஅருட்பா உரைநடைப்பகுதி" என்ற பெயருடன் ஒரே புத்தகமாக யாம் முதன்முதலில் வெளியிட்டோம்(1978). இப்போது வள்ளற்பெருமானது அருளிச்செயல்கள் அனைத்தும் மூன்று தொகுதிகளாக(புத்தகங்களாக) வழங்கி வருகின்றன.

(1) திருஅருட்பா முதல்ஐந்து திருமுறைகள்

(2) திருஅருட்பா ஆறாம் திருமுறை

(3) திருஅருட்பா உரைநடைப்பகுதி

இம் மூன்றும் செம்பதிப்பாக, ஆராய்ச்சிப் பதிப்பாக, நம்மால் நமது சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலைய வெளியீடாக வெளியிடப் பெற்றுள்ளன.

(நன்றி - வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு ­- முனைவர் ஊரன் அடிகளார்)

Pin It