கடவுள்
என்று கூறி
கல்லாக்கி
வேடிக்கைப்
பார்க்கிறீர்கள்...
கள்ளிப்பால்
கொடுத்து
காட்டில்
எறிகிறீர்கள்...
காதல்
என்ற பெயரில்
காட்டுப் பங்களாவில்
கூட்டுப் பலாத்காரம்
செய்கிறீர்கள்...
கல்விக்கூடம்
வந்தால்
கருக்கலைப்பு
நடத்துகிறீர்கள்...
அலுவலகம்
சேர்ந்தால்
அறைக்கு
அழைக்கிறீர்கள்...
அரசியலில்
இணைந்தால்
அரைநிர்வாணப்
படுத்துகிறீர்கள்...
மதவெறிப்
பிடித்தால்
ஆடைகளனைத்து
களிப்பாட்டம்
ஆடுகிறீர்கள்...
இன்னும்
என்னவெல்லாம்
திட்டம் உண்டு
மனிதம்பெருத்த
மலங்களே...
போதும்..
போதும்..
போதும்..
நிறுத்திக்கொள்ளுங்கள்
இறுதியாக
எச்சரிக்கிறோம்...
நாங்கள்
பெரியாரின்
பெயர்த்திகள்..
எங்கள்
கைகளிலும்
வாள்கள்...
சுடுமணலில்
உங்களைக்
கிடத்தி
ஆடை கிழித்து
ஆண்மை
அழிப்போம்..
ஆம் இனி
எங்களின் காலம்
எதிர்வினைக்காலம்...
- தமிழிசைப்பா