ஐம்பது பொன்னம் நகை

ஐம்பதாயிரம் பணம்

கழுத்திற்குத் தொடரி

விரலுக்குக் கணையாழி

போகவரத் துள்ளுந்து

கட்டில்

மெத்தை

நிலைப்பேழை

கலக்கி

அரைவைப்பொறி

சலவைப்பொறி

குளிர்ப்பேழை

ஏனங்கள்

திருமணச் செலவு மொத்தம்

என எல்லாம் கொடுத்து

எல்லாம் முடிந்து

பால் சொம்புக் குவளையுடன்

உள்ளே நுழைந்தாள்

வெட்கப்பட்டுக்கொண்டே அவள்

உள்ளே இருந்தான்

வெட்கமில்லாமல் அவன்.

Pin It