-                             பேராசிரியர் சாய்பாபா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய விடுதலை தடையானது, சட்டப் பாதுகாப்புகளை நீர்த்துப் போகச் செய்தும், தனிமனித சுதந்திரத்திற்கான உரிமையை சமரசம் செய்யும் வகையில் உள்ள ஒரு ஆபத்தான முன்மாதிரித் தீர்ப்பு. . . . . . . . . . . . .

-                             பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு பேராசிரியர் சாய்பாபா மற்றும் ஐவரை சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. அந்த விடுதலைக்கு எதிராக கடந்த 16 அக்டோபர் 2022 சனிக்கிழமையன்று அவசர மேல்முறையீடு செய்ய மகாராஷ்டிர அரசை உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அந்த அவசர முறையீடு குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL) தனது தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது. அக்டோபர் 14, 2022. பேராசிரியர் சாய்பாபா மற்றும் பிறரை விடுவித்த பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நியாய மான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இடைநிறுத்தப் பட்டிருப்பது கவலையளிக்கிறது. விடுதலைக்கு எதிரான மகாராஷ்டிர அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க அனுமதியளித்த தலைமை நீதிபதியின் முடிவு அசாதாரணமானது. அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா மாநில அரசு சார்பில் ஆஜராகியிருந்தார். நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான 2வது அமர்வு முன்பு இந்த தடை வாய்மொழியாகக் கோரப் பட்டது.

-                             பம்பாய் உயர்நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையான நிலையில், நீதிபதி சந்திரசூட், மேல்முறையீட்டை திங்கட் கிழமை மட்டுமே பட்டியலிட முடியும் என்று திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சனிக்கிழமை இந்த விஷயத்தை பட்டியலிட மறுத்துவிட்டார். மேலும் நீதிபதி சந்திரசூட், குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை அடைந்து விட்டதால் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டாலும், நோட்டீஸ் மட்டும் அனுப்பப்படும் அந்த விடுதலை உத்தரவைத் தடுக்க முடியாது என மறுத்தும் உள்ளார். இந்நிலையில் அதன்பிறகுதான், தலைமை நீதிபதி தனது நிர்வாக அதிகாரத்தின் அடிப்படையில், நீதிபதிகள் எம். ஆர். ஷா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு கொண்டு வரப்பட்டது, விடுமுறை நாளான சனிக்கிழமை, அக்டோபர் 15, 2022 அன்று விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை நாளில் சிறப்பு அமர்வு முன் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க அனுமதிக்கும் முடிவில் மிக முக்கியமான இரண்டு சிக்கல்கள் எழுகின்றன:

-                             (i) இதற்கு முன், தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும் போதும் , அல்லது கடுமையான அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் நீதிமன்றத்தின் அவசரத் தலையீடு வேண்டி அவசர வழக்கு விசாரிக்கப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நீதிமன்றத்தின் விடுமுறை நாளில் அசாதாரண அமர்வுகள் அனுமதிக்கப் பட்டது. முன்பு யாகூப் மேனன் வழக்கில் மற்றும் நிர்பயா வழக்கில் கைதிகள் உயிர் வாழும் உரிமைக்காக நள்ளிரவு விசாரணைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே போன்று ஊடகத் துறையில் கைது தடுக்க வேண்டி அருணாகோஸ் சுவாமி, வினோத் துபே வழக்கில் உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரணை செய்து தனிமனித சுதந்திரம் பாதுகாத்தது. ஆனால் அது போன்ற ஒரு நடவடிக்கைக்கு நேர் எதிராக விடுதலை ஆனவர்களை மீண்டும் சிறையில் அடைக்க விடுமுறை நாளில் விசாரிக்கப்பட்ட வழக்கு இந்த வழக்கு.

-                             (ii) ஒரு குற்ற வழக்கு மேல்முறையீட்டில் தகுதிவாய்ந்த நீதிமன்றம் வழங்கிய விடுதலை உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது கவலைக்குரியது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பதை, `சட்டத்தின் சரியான செயல்முறை' மூலம் எதிர் கொள்ள அரசிடம் எந்த நியாயமான காரணம் இல்லை.

-                             எவ்வாறாயினும், இந்த செயல் `சட்டத்தின் ஆட்சியை கடுமையாக அச்சுறுத்துகிறது. சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் UAPA இன் கீழ் தண்டனை பெற்று பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை பெறும் வாய்ப்பு மறுக்கப்படும் நிலை பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். நீதிமன்றம் மூலம் எப்போதாவது கைதி பயனடைய இயலுமா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. இது இந்தியாவில் உள்ள நீதித்துறையின் குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு அடிப்படைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாக உள்ளதால் தவறான முன்னுதாரணமாக மாறுகிறது. மேலும் வழக்கில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விடுதலையை நிறுத்தி வைக்க அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கத் தூண்டும், அதன் மூலம் தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை பாதிப்படையும். இவ் வழக்கில் ஏற்கனவே பின்பற்றி வந்த மரபுகளைப் புறக்கணிப்பதில் உச்ச நீதிமன்றம் காட்டிய ஆர்வம், விதிகளை புறக்கணித்த அலட்சியம், நீதியை வழங்குவதில் மட்டும் நடைமுறையைப் புறக்கணிக்கவில்லை; மாறாக அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்த வழக்காடிகளுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் செயல். 

-                             பேராசிரியர் சாய்பாபாவின் மேல் முறையீட்டு வழக்கில் பம்பாய் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படை யாதெனில், ஏற்கனவே சட்டப்படி நிறுவப்பட்ட நடைமுறைப் பாதுகாப்புகளில் இருந்து உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டும் அரசு விலகக் கூடாது. நடைமுறைப் பாதுகாப்புகளை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதை வலியுறுத்துவதாகும். உபா வழக்கில் நடைமுறைப் பாதுகாப்புகள் கட்டாயமாகக் கடைபிடிக்க வலியுறுத்தக் காரணம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் கடந்த காலத்தில் மிகத் தவறாகப் பயன் படுத்தப்பட்ட வரலாறுதான். பம்பாய் உயர் நீதிமன்றம் தடா மற்றும் பொடா சட்டத்தின் முன் தீர்ப்பு எல்லையாகக் கண்டது. மேலும் அரசியல் எதிரிகள், மாற்று கருத்துக் கொண்ட செயல் பாட்டாளர்கள் இவ்வழக்கில் சிக்க வைக்கப்படும் அவலம் கணக்கில் எடுத்துக் கொண்டு சட்ட நடைமுறை கடைபிடிக்கத் தவறியதை கணக்கில் கொண்டது. உபா சட்ட பிரிவு 45(2) கீழ் வழக்கில் உள்ள ஆதாரங்களை மீண்டும் ஒரு நிபுணர்கள் குழு சுயாதீன மதிப்பாய்வு செய்து, அந்த முடிவின் அடிப்படையில் வழக்கு நடத்த அனுமதி (sanction) வழங்கப்பட வேண்டும். இது ஒரு கட்டாயத் தேவை என்றும் அது கூறுகிறது.

-                             பாராளுமன்றத்தில் (2008-09 இல்) இச் சட்டத்தின் திருத்த மசோதாவை வைத்து உரையாற்றிய அன்றைய உள்துறை அமைச்சர் தனது உரையில் வழக்குப் போடுவது காவல்துறையாக இருந்தாலும், வழக்கை ஆய்வு செய்து வழக்கை மேலும் தொடர அனுமதிப்பது நிர்வாக துறையினர் என்பதால் பாதுகாப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே வழக்கை அனுமதிக்கும்முன், விசாரணையில் சேகரிக்கப் பட்ட சாட்சியங்கள், ஆதரவுகளை ஒரு சுயாதீன அதிகாரத்தால் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். பம்பாய் உயர்நீதி மன்றம் அந்த உரிமை குற்றம் சாட்டப்பட்டவர்க்கு உண்டு எனக் கூறியது. ஆனால் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழி சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் அந்த சுதந்திரமான ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என்ற தீர்ப்பு அடிப்படையை உச்சநீதிமன்றம் முற்றிலும் புறக்கணித்து விட்டது. நாட்டின் நெருக்கடி காலத்தில் அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஏடிஎம் ஜபல்பூர் / எதிர் / சுக்லா என்ற வழக்கில் மிசா கைதிகளின் வழக்கில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் அலட்சியம் செய்யப்பட்டதை நீதிபதி கண்ணா சுட்டிக்காட்டி இது போல் சட்டம் கொடுத்த பாதுகாப்பு முறைமைகள் அலட்சியம் செய்யக்கூடாது என்றார்.

பேராசிரியர் சாய் பாபாவுக்கு தண்டனை வழங்கிய கச்சிரோலி விசாரணை நீதிமன்றம் நடுநிலையோடு இல்லை என்பதை அந்த நீதிபதி "சாய்பாபா அதிக பட்ச தண்டனை பெற கூடியவர். ஆனால் சட்டம் ஆயுள் தண்டனை மட்டுமே குறிப்பிட்டுள்ளதால் தனது கைகள் கட்டப்பட்டு விட்டது" என பாகுபாட்டுடன் நடந்து கொண்டதை உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டி உள்ளது. அது இது போன்ற கீழமை நீதிமன்றத்து கருத்து சாதகமானது, ஏற்புடையதல்ல என்றும் கூறியுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் கீழமை நீதிமன்றத்து வாதத்தை எடுத்துக் கொண்டது. இது போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் நகர்புற நக்சல் என்றும் அவர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பு தேவையில்லை என பாதகமான பார்வையில் வழக்கை தீர்மானித்து உள்ளது. பேராசிரியர் சாய்பாபாவுக்கு 90. /. சதவீதம் உடல் ஊனமுற்றவர். நோய் வாய்ப்பட்டு வாடுபவர். தன்னைப் பராமரிப்பு செய்ய இயலாதவர். ஏற்கனவே சிறையில் அவரின் சக வழக்கு சிறைவாசி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து போயுள்ளார். சாய்பாபா குறைந்த பட்சம் வீட்டு சிறையில் இருக்கவாவது உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பு முறைமைகள் பேராசிரியர் சாய்பாபாவுக்கு மறுக்கப்படுகிறது. தொடர்ந்து சிறையில் வாட சாய்பாபாவை நிர்பந்திப்பது மிகவும் வேதனை யானது.

-                             உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் விடுவித்த ஒருவரை மேல்முறையீட்டு விசாரிக்காமல் விடுதலைக்கு தடை செய்திருப்பது சாய்பாபாவை சட்ட விரோதமாக சிறையில் வைத்திருப்பதற்கு சமம். மீண்டும் நெருக்கடி காலத்தில் உள்ள நிலை போன்றும் ஏடிஎம் ஜபல்பூர் எதிர் சுக்லா வழக்கு நடந்த காலம் போல நாடு மாறி வருவதையும் உணர முடிகிறது.

-              டாக்டர். வீ.சுரேஷ், மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) தேசியப் பொதுச் செயலாளர்.

Pin It