ஒரு சிறிய 1/2“ உயரம் உள்ள லிங்கத்தை கர்ச்சீப் துணியில் வைத்து யாருக்கும் தெரியாதவாறு முகம் துடைப்பதுபோல் வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு லிங்கம் அடிவயிற்றிலிருந்து வருவது போல் செய்து காண்பிக்கவும்.
பாட்டிலின் உள்ளே இருக்கும் துணியை வெளியில் எடுத்து விட்டு மீண்டும் அதேபோல் துணியை வரவழைத்தல்
தேவையானப் பொருட்கள்
மூடியுடன் பாட்டில், பாட்டில் உள்ளே போகும் அளவுக்கு அட்டை உரை,மெல்லிய துணி
மேஜிக் செய்யும் முறை
மூடியுடன் உள்ள பாட்டிலின் உள்ளே ஒரு கலர் துணி இருப்பதைப் பார்வையாளருக்குக் காண்பிக்க வேண்டும். மூடியைத் திறந்து உள்ளே இருக்கும் துணியை வெளியில் எடுத்து விடவும். அந்தத் துணியைப் பத்திரமாக தீயில் எரித்து விடவும். பிறகு பாட்டிலைக் காண்பித்து எதுவும் இல்லை என்பதை உறுதிப் படுத்தவும். பாட்டில் மூடியை எடுத்து மூடிவிடவும். தற்போது தயாராக உள்ள உரையை பாட்டில் மேலே செறுகவும். மந்திரம் போடுவது போல முனுமுனுக்கவும். பாட்டில் மீது இருந்த உரையை எடுத்து விடவும். இப்போது மீண்டும் முன்பு எரித்த துணி அப்படியே பாட்டில் உள்ளே இருக்கும். கண் முன்னே எரிக்கப்பட்ட துணி மீண்டும் அப்படியே இருக்கும். பார்ப்பவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவர்.
மேஜிக் இரகசியம்
பாட்டிலுக்கு ஏற்ற 9" உயர உரை செய்யும் போது ஒருபுறம் 1" உயர தக்கையை வைத்து விட வேண்டும். தங்கையின் மத்தியில் உரையின் உயரத்திலிருந்து 1" குறைவாக உள்ள சிறிய கம்பியை பொருத்தி விடவும். ஒரே அளவு உள்ள எந்த வேறுபாடும் இல்லாத இரண்டு மெல்லிய துணி வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்று பாட்டில் உள்ளே இருக்கும் மற்றொண்றை உரையின் முன்பகுதியில் கம்பி முனையில் வெளியில் தெரியாதவாறு வைத்து விடவும். பாட்டில் மூடியின் மேல்புறம் வட்டமாக வெட்டி எடுத்து விடவேண்டும். முதலில் பாட்டிலில் இருந்த துணியை எடுத்து விட்டு பிறகு உரையை பட்டில் மீது செருகும்போது துணி பாட்டிலுக்கு உள்ளே சென்று விடும்.
குறிப்பு: இதைத் தனியே பலமுறை செய்து பயிற்சி பெறவும்.