சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்
காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்
பறைக்கு எதுக்குடா படிப்பு? என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்
உங்களுக்கென்னப்பா
சர்க்காரு வேலையெல்லாம்
உங்க சாதிக்குத்தானே! என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ
ஒன்று செய்!
உன்னையறியாத ஒரு ஊரில்
உன்னைப் பறையனென்று
சொல்லிப்பார்!
என் வலி
உனக்குப் புரியும்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
வலி
- விவரங்கள்
- ராசை.கண்மணிராசா
- பிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2006