கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Periyar 235வங்காளத்தைச் சேர்ந்த குல்னாகாளி கோவிலுக்குள் தீண்டாதார் எனப்படுவோர் செல்ல வேண்டுமென்று சத்தியாக்கிரகம் செய்து வந்ததும், அதனால் சிலர் கைதியானதும் சென்ற வாரப் பத்திரிகையில் தெரிந்திருக்கலாம். இப்போது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் தீண்டாதார் எனப்படுவோர் உள்பட தாராளமாய் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்பதாக மேல் ஜாதியார் என்பவர்கள் ஒப்புக் கொண்டு ராஜி ஏற்பட்டு கைதியாக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்து விட்டார்கள்.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 21.07.1929)