இசைக்கு மொழியில்லை என்று பல தடவை பலர் சொல்லிவிட்டார்கள். நான் என்ன புதிதாக சொல்லப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். இது விஞ்ஞான ஆராய்ச்சியிலிருந்து கிடைத்த நிரூபணம். நீலாம்பரி தூங்கவைக்கும், காம்போதியும் முகாரியும் அழவைக்கும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மைதான் என்பது அந்த இராகங்களைக் கேட்டவர்களுக்குத் தெரியும். பாட்டுகூட முக்கியமில்லை அந்த இராகமே உணர்வுகளைத் தொட்டுவிடும், இது நிஜம்.
சோகம், இன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்கும் மேற்கத்திய இசைகளை, இதற்கு முன் ரேடியோவையே கேட்டிராத ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடம் போட்டுக் காட்டியபோது அவர்கள் இராகங்களை அவற்றின் உணர்ச்சி அடிப்படையில் பிரித்து அறிந்து கொண்டார்கள் என்று தாமஸ் ஃபிட்ஸ் (மேக்ஸ் ப்ளாங்க் இன்ஸ்ட்டிடியூட்) என்பவர் கண்டுபிடித்திருக்கிறார்.
- முனைவர் க.மணி