தலைமுடி என்பது உயிரற்ற செல்களால் ஆன ஒன்று. அதாவது இறந்துபோன புரோட்டீன்கள். இவை உப்புத் தண்ணீரால் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாது. ஒருவருடைய தலைமுடி உதிர்வதற்குக் காரணம் அவருடைய பரம்பரை சார்ந்த ஜீன்கள்தான். அப்பாவுக்கு வழுக்கை இருந்தால் மகனுக்கு வழுக்கை விழ வாய்ப்புகள் அதிகம். இதுதவிர அனீமியா, சத்துக்குறைவு நோயுள்ளவர்களுக்கும், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் வழுக்கை விழ வாய்ப்புண்டு. அதிகமாக பொடுகு இருந்தாலும் தலைமுடி கொட்டும். மற்றபடி உப்புத் தண்ணீரில் குளித்தாலோ, கடல் தண்ணீரில் குளித்தாலோ முடி கொட்டாது.