அநீதிகளையே கொண்ட ஒரு அமைப்பு இயங்க முடியுமா? வலிமைபெற முடியுமா? ஆயிரக் கணக்கான ஆண்டுகள் - ஆட்சியும் அதிகாரமும் இல்லாமலே நிலையும் வலிமையும் பெற முடியுமா? அப்படியான வியப்புக்குரிய அநீதிக்கும்பலின் அமைப்புதான் - பார்ப்பனியம். இப்போது அதற்குப் புதுப்பெயர் இந்து மதம் - என்பது.

யாருடா உனது நிறுவனர்? பெரியார் தான் கேட்டார் - ஏ, மானங்கெட்ட பார்ப்பனர்களே! இந்து மதம் என்கிறாயே - அதன் நிறுவனர் யார்? இல்லாத்துக்கு நபியும், கிறிஸ்துவத்துக்கு கிறிஸ்தும் இருக்கிற மாதிரி, உனக்கு எவனாவது உண்டா?  எது உன் பிரார்த்தனைக் கூடம்? முஸ்லீம் மசூதிக்குப் போறான்; கிறிஸ்தவன் சர்ச்சுக்குப் போறான். இந்து என்று சொல்லும் உனக்கு அப்படி அனைத்து மக்களும் ஒன்றாகக் கூடி வழிபடும் ஒரு இடம் உண்டா?

எது உன்னுடைய மத நூல்? கிறிஸ்துவன் - பைபிளையும், முஸ்லீம் குரானையும் வேத நூலாகக் கருதுகிறார்களே? இவர்களைப் பார்த்துத் தானே - 15ம் நூற்றாண்டில் - பகவத் கீதை என்ற ஒன்றைச் செய்து, இடைச்செருகலாக அதை மகாபாரதத்தில் திணித்தாய்? - என்கிற மாதிரி இந்தியாவின் அத்தனைப் பார்ப்பனக் கழி சடைகளும் பெரியாரைப் பகைவனாக நினைக்கிறார்களே தவிர - அவர் கேட்ட கேள்விகளுக்கு ஒருவரும் பதில் கூறவில்லையே!

இரண்டே முக்கால் சதவீதம் பார்ப்பனர்களுக்காக, ஒரு மதமா? இந்து மதம் என்ற இந்தப் பார்ப்பன மதத்தால் பயனும் பெருமையும் அடைகிறவர்கள் - மக்கள் தொகையில் இரண்டே முக்கால் சதவீதமாக இருக்கிற பார்ப்பனர்கள் மட்டுமே. (1) பார்ப்பனர்கள் பூமியில் கடவுளுக்குச் சமமானவர்கள். (2) கடவுள்களும் பார்ப்பன மந்திரத்துக்குக் கட்டுப்படுவார்கள். (3) மற்ற மக்கள் பார்ப்பன இடைத்தரகன் மூலமே கடவுளை வழிபட முடியும். சாராம்சத்தில் இது ஒரு பார்ப்பன (1) அரசியல் (2) சமூகப் (3) பொருளாதாரப் பாதுகாப்பு ஏற்பாடு. பார்ப்பனர்க்காகப் பராமரிப்பதும் - பாதுகாப்பதும் அரசர்ககளின் கடமை; சத்திரிய தர்மம். பார்ப்பான் சொல்லுகிறபடியே அரசன் ஆட்சி செய்ய வேண்டும். நுகர்வில் பார்ப்பனர்களுக்கே முன்னுரிமை. அக்ர - ஆகாரம் = முதல் உணவு; முன்னுரிமையுடன் உணவு. பார்ப்பான் ஏர்பிடித்தால் - பூமாதேவி கோபித்துக் கொள்வாள். பார்ப்பான் பட்டினி கிடக்கும் தேசம் அழியும்; அப்படி அழிய விடுகிற அரசன் குடும்பத்தோடு அழிவான். இவற்றின் சுருக்கம் (1) அரசன் யாராக இருந்தாலும் ஆட்சி முறை பார்ப்பன ஆட்சிமுறையாக இருக்கும். (2) பஞ்சம், பசி, பட்டினி நாட்டில் தாண்டவமாடினாலும் பார்ப்பானுக்கு உணவும் வசதிகளும் கிடைக்கும். (3) பார்ப்பனர்கள் சமூகப் பெரியோர்களாய், வணங்கத்தக்கவர்களாய் - கடவுளுக்குச் சமமாகக் கருதப்படுவார்கள். எத்தனைத் தந்திரமான  அயோக்கியத் தனமான ஏற்பாடு இது?

கூட்டணித் தந்திரம்

இதில் ஆட்சி அதிகாரத்தை சத்திரியர்களுக்குக் கொடுத்து - சத்திரியர்களின் கடமை பார்ப்பனரைப் பாதுகாப்பதே என்றார்கள். பொருளியல் - வணிக அதிகாரத்தை வைசியர்களுக்குக் கொடுத்து - பார்ப்பனத் தேவைகளை நிறைவு செய்வதே வைசியக் கடமை என்றார்கள். இவர்கள் எல்லாரும் - மக்களில் 15 விழுக்காடுதான். மீதி 85 விழுக்காடு மக்களின் நிலை என்ன?

60 விழுக்காடு சூத்திரர்கள்

இந்துக்களில் 60ரூ சூத்திரர்கள். இவர்களுடைய வேலை என்ன? விவசாயம், தொழில், உடல் உழைப்பு, ஆடு, மாடு, காடு, கடல் பராமரிப்பும். இவர்கள் பார்ப்பனர்களால் தீண்டப்படக் கூடாதவர்கள். உணவு உற்பத்தியில் இவர்களுக்குத்தான் அதிகப் பங்கு என்றாலும் - விநியோகம் என்று வரும்போது - பார்ப்பன - சத்திரிய - வைசியர்களுக்கும் கீழே இவர்கள் வருவார்கள். போரில் வெல்லப்பட்டவர்கள் என்றும் - தாசிமக்கள் என்றும் சூத்திரர்களில் பலவகை உண்டு. இவர்கள் ஒன்றுபட்டு - 15% ஆன பார்ப்பன -சத்திரிய - வைசியக்கும்பலை ஒழித்துவிடாமல் இருக்க, சூத்திரர்கள் 7000க்கும் அதிகமான உள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டு விட்டார்கள்.

ஏற்கனவே 56 தேசங்களாகவும் - மொழிகளாகவும் பிரிந்த மக்கள் - இப்படி உள்சாதிகளால் பிரிவுபட்டு உதிரிகளானார்கள். 56 - தேசப் பார்ப்பனர்கள் ஒரே குரலில் பேசுவார்கள். ஆனால், 56 - தேச சூத்திரர்கள் எந்தக் காலத்திலும் ஒன்றுபட முடியாது. இந்தியாவில் எந்தப் புரட்சியும் வெற்றி பெறாது - என்பதின் பிரம்ம முடிச்சு இதுதான். சரி அடுத்து என்ன? இவர்களுக்குள்ளேயே - இவர்களுக்கும் -  கீழே 25ரூ பட்டியல் வகுப்பு மக்களும், பழங்குடியினரும் இருப்பதுதான்.

தீண்டப்படாதவர்கள்

சாதியில் பஞ்சமர்களாய் - சமூகத்தில் தீண்டப்படாதவர்களாய் - பார்க்கப்படாதவர்களாய் - ஊரில், ஊருக்கும் வெளியே சேரிகளில் வாழ்கிறவர்களாக ஆக்கப்பட்டார்கள். இவர்கள் மக்களில் 17% உழைப்பில் - உற்பத்தியில் இவர்களின் பங்கு 90 % என்றால், நுகர்வில் 10% கூடக் கிடையாது. சூத்திரனுக்கு - கோவணம் அளவு துணியும் - உயிர்பிழைக்கும் அளவு உணவும் தரச்சொல்லும் மனுநீதி - பஞ்சமருக்கு அந்த உரிமையையும் மறுக்கின்றது. நண்டு நத்தை - கொட்டிக்கிழங்கு - கோரைத்தண்டு - இவைதான் இவர்களுக்கு உணவு. ஆனால், சாட்டை அடி, சாணிப்பால், புளியன்மிலாரினால் அடிக்கப்படுதல் - ஆகிய தண்டனைகளுடன் மேல் சாதிகளுக்கு உழைப்பது இவர்களுடைய வேலை. இரவில் இருட்டில் வந்து - தெருக்கூட்டல், மலம் அள்ளுதல் ஆகிய வேலைகளைச் செய்து விட்டு, வந்தசுவடு பூமியில் இல்லாமல் மரக்கிளைகளை இழுத்துக் கொண்டுபோய் இவர்கள் கால்சுவடுகளை மறைத்துவிட வேண்டும்.

பழங்குடி மக்கள்

காடுகளில் வாழும் 8ரூ இந்திய மக்களின் நிலை அதிலும் மோசம். இவர்கள், நாட்டு மக்களாகக் கணக்கிடப்படுவதே இல்லை. ‘செடியூல்டிரைப்’ - மக்கள் இந்துக்கள் அல்ல என்று ஒரு சட்டமும் உண்டு. காலப்போக்கில் பார்ப்பனர்கள் அதையும் மாற்றி - இல்லை - அவர்களும் இந்துக்கள் தான் என்று ஆக்கிவிட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்-ன் 1300க்கு மேற்பட்ட கிளைகள் - இன்று மத்தியப் பிரதேசம், அசாம், நாகாலாந்து, மேகாலயா, ஒரிசா என்ற பழங்குடியினர் பகுதியில் தான் இயங்குகின்றன. ஆஸ்திரேலிய கிறிஸ்துவப் பெரியாரை - ஸ்டெயின்ஸ் பாதிரியாரை அவரின் மகனோடு ஜீப்பில் வைத்து எரித்தவர் - பழங்குடியினர்தான். அத்தனை வெறியை கிறித்துவ மதத்தின் மீது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

காட்டுமிராண்டிகளை நாகரிகப்படுத்தியவர்கள்

கங்காசாகரில் குழந்தைகளை உயிரோடு எறிந்து, பூரி செகநாதர் தேரில் விழுந்து செத்து சுவர்க்கம் அடைந்து, விதவைகளை உடன்கட்டை ஏற்றிக்கொன்ற காட்டுமிராண்டிகளான பார்ப்பதைத் தலைமை - இந்திய சமூகத்தை நாகரிகப்படுத்தியவர்கள் (1) அரபியக் கலை, கலாச்சார வல்லுநர்களான முஸ்லீம்களும் (2) படிப்பும் நாகரிகமும் மிகுந்த கிறிஸ்தவர்களும் தான். இன்று இந்திய மக்களில் 11% முஸ்லீம்கள்; 3ரூ  கிறிஸ்தவர்கள். இந்த 14%  மக்களில் 70 விழுக்காட்டினர் - பார்ப்பன சாதிய ஒடுக்கு முறைகளால் மதம் மாறிய - பிற்படுத்தப்பட்ட - பட்டியல் வகுப்பு - பழங்குடி மக்கள்தான். நாகர்கோவில் கிறித்தவர்கள் எல்லோரும் - திருவாங்கூர் மகாராசாவின் பார்ப்பன சட்டத்தில் - மாட்டுக்குப் பதிலாக ஏரில் பூட்டப்பட்ட - அணை உடைப்பில் உயிரோடு போட்டு மூடப்பட்ட நாடார் - ஈழவ இனமக்கள் தான். மேகாலயாவின் கிறித்தவர்கள் 100%  பழங்குடி மக்கள் தான். பிற்படுத்தப்பட்ட - பட்டியல் வகுப்பு - பழங்குடி மக்களுக்கு ஓரளவு - படிப்பு, வசதி, மரியாதை ஏற்பட்டது - இஸ்லாத்தால் - கிறிஸ்து வத்தால் - முஸ்லீம் வகுப்பு  கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் சட்டங்களால் என்பதை யார் தான் மறுக்க முடியும்?

யாருக்கும் தெரியாதா?

இப்படியாப்பட்ட உலக மகா அயோக்கியப் பார்ப்பனர்கள் - இந்திய 100 கோடி ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை -  2000 ஆண்டுகள் - விலங்குகளைப்போல - காட்டுமிராண்டிகளைப்போல - நடத்திக் கொண்டு மந்தை  சொந்தக் காரர்களாக இருக்கும் பார்ப்பன அயோக்கியத்தனம் - பார்ப்பன அறிஞர்களுக்குத் தெரியாதா? உ.வெ.சாமிநாதய்யர், சர்.சி.பி.இராமசாமி, சர்வப்பள்ளி ராதா கிருஷ்ணன்,சோ.ராமசாமி, இந்து-ராம், சின்ன பெரிய சங்கராச்சாரி, கோவிந்தாச்சாரி பயல்கள் - இந்த அறிவும் தெளிவும் இல்லாத மடையர்களா? சூத்திரப் பஞ்சம, வடஇந்திய யாதவ, குர்மி, நாயி தலைவர்கள் பார்ப்பன சூழ்ச்சி புரியாத முட்டாள்களா? பஸ்வான், கோமங்கோ, சங்மா எல்லாரும் பார்ப்பனப் பிச்சைக்கு அலைகிறார்களே தவிர - தம் இன இழிவு ஒழிய என்னத்தைப் பிடுங்கினார்கள்? பார்ப்பன ஆட்சியில், அமைச்சர் - முதலமைச்சர் எம்.எல்.ஏ என்பதால் இழிவு ஒழியுமா?

உலகச் சமூகம் என்கிற குருட்டுக் கும்பல்

இந்தியாவுக்குள் நடக்கும் பார்ப்பனக் காலித் தனங்களை - 700 ஆண்டு முஸ்லீம் ஆட்சி ஒழிக்க முடிந்ததா? 200 ஆண்டு - ஆங்கிலேயே ஆட்சி பார்ப்பன வஞ்சகத் திட்டங்களை அகற்ற முடிந்ததா? உலகச் சமூகம் என்கிற - இந்தியர் தவிர்த்த 500 கோடிப் பேர் - பிறவி அடிப்படையில் பார்ப்பனர் நடத்தி வரும் இன ஒடுக்குமுறைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் குருட்டுக்கும்பல் என்பது தவிர வேறு என்ன? உலக அறிஞன் எவனாவது இந்தியக் கொடுமைகளைப் பற்றி எழுதுகிறானா? பேசுகிறானா?.....

Pin It