தேவையான பொருட்கள்

கோழி - 1/2 கிலோ
எண்ணைய் - 1/2 கப்
இஞ்சி - 1 அங்குலம்
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 1/2 கிலோ
பூண்டு - 3 பல்
கொத்தமல்லி தழை - சிறிதளவு
வெங்காயம் - 1 கப்
கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி
 
செய்முறை

கோழியை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்ட வேண்டும். தக்காளி, இஞ்சி, மல்லித்தழை, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாய், மல்லித்தழையை நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணைய் விட்டு பூண்டை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். தக்காளியை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.

பின்னர் பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி போட்டு நன்கு கிளறவேண்டும். அத‌னுடன் பிறகு கோழியை சேர்த்து எண்ணையில் சுருள வேக விட வேண்டும். கரம் மசாலா, வெங்காயம் சேர்த்து கிளறி சிக்கன் வெந்ததும் இறக்க வேண்டும்.

Pin It