தேவையான பொருட்கள்

முட்டை - 1

சாதம் - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - ஒரு தேக்கரண்டி

நெய் - அரை மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

உப்பு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை

சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும். அதனுடன் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். சாதத்துடன் முட்டை சேர்ந்து பொலபொலவென்று வந்ததும் மேலே நெய் ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும்.

 

Pin It