Kavan Movie

'அநேகன்' மாதிரியான சுமாரான படத்தை எடுத்துட்டு, அடுத்து விஜய்சேதுபதியுடன் இணைகிறார் கே.வி.ஆனந்த் என்ற செய்தி வந்தவுடன், விஜய் சேதுபதியின் ரசிகனுக்கு அது பேரிடியாய் இறங்கியது. ஏன்னா 'கழுதை தேஞ்சி கட்டெறும்பு' ஆன கதையா நல்ல படம், ஆவரேஜ் படம், சுமார் படம், சுமார் மூஞ்சி குமார் படம் என ஒருவித ஆர்டரா படம் குடுத்துட்டு இருந்தாரு கே.வி.ஆனந்த். விஜய் சேதுபதிக்கும் றெக்க சரியாப் போகலை. அவருக்கும் ஒரு வெற்றி தேவையா இருந்துச்சு. அதனால பயம் இருந்தது. ஆனா எதிர்பாக்காத மாதிரி கே.வி.ஆனந்த் இதுவரை எடுத்த படங்களிலேயே பெஸ்ட்டா அமைஞ்சிருச்சி 'கவண்'.

பாபி சிம்ஹா மட்டும் நடிக்காம இருந்துருந்தா கண்டிப்பா இந்தப் படத்துக்குதான் ‘கோ-2’ன்னு தலைப்பு வச்சிருப்பாங்க. அவ்வளவு தொடர்பு இருக்கு ரெண்டு படத்துக்கும்.

சில இளம் பத்திரிகையாளர்களுக்கும், ஒரு பெரிய கார்ப்பரேட் தொலைக்காட்சி ஊடக முதலாளிக்கும் இடையேயான யுத்தமே இந்த ‘கவண்’. அதை எந்த இடத்திலயும் சலிப்பூட்டாம, சுவாரஸ்யமான காட்சிகளோட, தொலைக்காட்சிகள் தங்களோட டிஆர்பி அரிப்புகளுக்காக ஆடுற ட்ராமாக்களையும் இணைச்சு அருமையா எடுத்துருக்காங்க.

விஜய் சேதுபதி வழக்கம்போல அதே சிறப்பு அதே அடக்கி வாசிப்பு. கெத்து போடுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருந்தாலும் அந்த மசாலா ஹீரோ இமேஜை கதைக்காக வேணாம்னு ஸ்டைலா தட்டி விடுறாரு. அட..அட.. இந்த ரோலுக்கு டிஆரை யோசிச்சான் பாருய்யா அவன்தான்யா கிரியேட்டரு. டிஆர் ஒரு காட்டாறு மாதிரி... அவரை அணை போட்டு ஒழுங்குபடுத்துனதால உள்ளருந்து ஒரு குணச்சித்திர நடிகர் வெளிய வர்றாரு. அதே நேரத்துல அவருடைய அக்மார்க்கான பஞ்ச் வசனங்கள் வரும்போதெல்லாம் தியேட்டர்ல எல்லாரும் குதூகலிக்கிறாங்க. அவ்வளவு எனர்ஜி அந்த மனுசன்கிட்ட.

அடுத்ததா.. இதையெல்லாம் என் வாயால எப்படி சொல்றது. அந்த அயன்ல வில்லனா வந்தாரே ஒருசேட்டு.. அந்தாளும் நல்லா எமோசனைக் காட்டுறாரு. ஆனா லிப்சிங்க்ல தான் ஹன்சிகா கிட்டயே தோத்து போயிடுறாரு. பாவனாவா வர்ற அந்த நடிகையும் அசத்துறாங்க.

படத்தோட பெரிய ப்ளஸ் இரண்டாம்பாதியின் வேகமான திரைக்கதை மற்றும் எடிட்டிங். முப்பது நிமிடங்களுக்கும் மேலாக ஓடுற க்ளைமாக்ஸ் காட்சிகள் சீட்டு நுனியில உக்கார வைக்குது. இந்த வருசத்தோட முதல் நல்ல மசாலா பொழுதுபோக்குப் படமா ‘கவண்’ அமைஞ்சிருக்கு. வீக்கெண்டுக்கு ஃபேமிலியோட போய், என்ஜாய் செய்வதற்கேற்ற ஒரு பக்கா என்ட்டடெய்னர் இந்த கவண்....

பி.கு: பாண்டே அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து திருந்துவார் என நம்புவோமாக... என்னது அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லியா... ரைட்டு விடு...

- சாண்டில்யன் ராஜூ

Pin It