தன்னில் தொலைந்த
ஆணைப் பற்றி
அவள் அறிந்தே இருக்கிறாள்...

தொலையாத பெண்ணின்
குறிப்புக்களை அவள்
வாசித்தபடியே இருக்கிறாள்...

வார்த்தைக‌ளின் பின்வாசல்களை
அடைத்தே இருக்கிறாள்...

தொலையாததைக் கொண்டு
தொலைந்ததைத் தேட‌
அவள் என்றுமே
முயன்றதில்லை...

ஈர்ப்பு விசை விதிகளை
அவள் ச‌ரிபார்த்த‌தில்லை...

ஊராரின் முன் ந‌ட‌க்கையில்
செவிக‌ளை அடைக்க‌
அவள் என்றுமே ம‌ற‌ப்ப‌தில்லை...