VCA (வாலண்டரி கோ-ஆர்டினேட்டிங் ஏஜென்சி பார் சைல்ட் அடாப்ஷன்) எனப்படும் தன்னார்வ சேவை மையம், சென்னை ஷெனாய் நகரில் உள்ளது. தத்தெடுக்க விரும்பினால் பிறப்பு சான்றிதழ், திருமணம், சொத்து விவரங்கள், மாத வருமானம். சேமிப்பு, உடல்நிலை ஆகிய அனைத்து பற்றியும் VCA நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில், உங்களுக்குப் பிறகு குழந்தையை யார் வளர்ப்பார் என்று தெரிவிக்க வேண்டும். பிறகு VCA நிறுவனத்தைச் சேர்ந்த சமூக சேவகர்கள் அந்தத் தகவல்களை சரிபார்த்து, தத்தெடுக்க நீங்கள் தகுதியானவர் என்று உறுதி செய்தால் குழந்தையை உங்களுக்கு காண்பிப்பர். குழந்தையை உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் முதல்கட்ட ஒப்பந்தம் தயாராகும். குழந்தையின் அப்போதைய உயரம், எடை முதலிய தகவல்களைக் குறித்து வைத்துக்கொண்டு, குழந்தைக்காக அதுவரை செலவான தொகையில் ஒரு பகுதியை உங்களிடம் பெற்றுக் கொண்டு, மூன்று மாதங்கள் வரை குழந்தை உங்களிடம் இருக்க அனுமதிப்பார்கள். மூன்று மாதத்துக்குப் பிறகு குழந்தையை வளர்க்க நீங்கள் உறுதியாக இருந்தால் நீதிமன்றம் மூலம் சட்டப்படிக் குழந்தை உங்களுக்கு சொந்தமாகும்.

நன்றி: கேளுங்கள் சொல்கிறோம், விகடன் பிரசுரம்

Pin It