சில வகை நோயாளிகளுக்கு ‘தாம்பத்யம்’ என்பது பழங்கதையாய், கனவாய், கானல்நீராய் ஆகிவிடுகிறது. குறிப்பாக இருதய நோயாளிகளுக்கு உடலுறவு என்பது எட்டாக்கனி, Cardiac Diseases எனப்படும் இருதய நோய்கள், (Coronary throm-bosis) எனப்படும் மாரடைப்பு நோய்க்கு இலக்கானவர்கள் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மிகக் கவனமாக உடலுறவில் ஈடுபடலாம். அப்போது அதிகஅளவு உணர்ச்சிவசப்படுதல், வேகமாக செயல்படுதல் கூடாது.

நோயாளிகளைப் பொறுத்தவரை சாதாரணமாக மன உளைச்சல் மற்றும் அன்றாட வாழ்வில் காரணங்களால் ரத்த அழுத்தம் ஏற்படக் கூடியவர்களுக்கு உடலுறவு நல்ல நிவாரணமும் மருந்தாக அமையக்கூடும். இதன் காரணமாக மன உளைச்சல் குறையும். இரத்த அழுத்த அளவும் குறைய வாய்ப்பு உண்டு. புத்துணர்வு ஏற்படும். அதே சமயம் மிகை ரத்த அழுத்த (High Bp) நோயாளிகள் உடலுறவில் ஈடுபடக் கூடாது. எச்சரிக்கையாக தவிர்க்க வேண்டும். மனதில் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் உடலுறவில் ஈடுபடும்போது உண்டாகும் உணர்ச்சிகள் அதிகரிப்பால் இரத்த அழுத்தம் மேலும் உயர்ந்துவிடும். மூளையிலுள்ள நுண்ணிய சின்னஞ்சிறிய இரத்த நாளங்கள் வெடித்து ரத்தக் கசிவு (Cerebral haemorrhage) நிலைகூட ஏற்படலாம்.

டி.பி. நோயாளிகளைப் பொறுத்த அளவில் தொற்றும் வகை சயரோக நோயாளிகள் உடலுறவில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும். நோயாளியிடமுள்ள கடுமையான நோய்த்தன்மை உடலுறவு நெருக்கத்தின் போது கிருமிகள் மூலம் பரிமாறி விடக்கூடிய ஆபத்து உள்ளது.

தொற்றும் வகை சயரோக இல்லாதவர்கள் எப்போதாவது அரிதாக உடலுறவு கொள்வது தவறில்லை.

ஆஸ்துமா நோயாளிகள் (Bronchial asthma) அடிக்கடி உடலுறவு கொள்ள வேண்டும் என மருத்துவ உலகின் சமீபகால ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. அடுத்த சில நிமிடத்தில் ஆஸ்துமா தாக்கப் போவதற்கான அறிகுறி தெரிந்துவிட்டால் உடனடியாக உடலுறவில் ஈடுபட்டால் ஆஸ்துமா வருவதைத் தவிர்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உடலுறவின்போது உணர்ச்சிமயமான நிலையில் மனித உடலில் (Adrenaline) அட்ரினலின் அதிகம் சுரக்கிறது. ஆஸ்துமா காரணமாக நுரையீரல் சுருங்கி அட்ரினல் சுரப்பு விரிவுபடுத்தி ஆஸ்துமா தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளது.

உடலுறவின்போது BP 30 முதல் 50 mm

HG சிஸ்டோகிவிடும். டயஸ்டோலிக் 10 முதல் 20 வரையும் உயரும். நாடித்துடிப்பு 140 பர் 180 வரை உச்சகட்ட உணர்வின் போது அதிகரிக்கிறது.

ஜப்பானைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் யுனோ திடீரென ஏற்பட்ட 5559 மரணங்கள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தவர். இவர்களில் 34 பேர் உடலுறவின் போது ஏற்பட்ட உச்சகட்டத் துடிப்புகளால் மாண்டவர்கள் என அவர் கூறுகிறார் பெண்களில் இதய நோய் கண்டவர்களது உடலுறவு நிலை தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படவில்லை.

இதயநோயாளிகளின் முந்தைய உடலுறவு முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் மருத்துவர்கள் தகுந்த ஆலோசனைகள் வழங்க இயலாது. மாரடைப்பு முதல் தடவையாக ஏற்பட்ட வர்களுக்கு மருத்துவரீதியாக சிக்கல்கள் எதுவும் இல்லாவிட்டால் சாதாரணமாக உடலுறவு கொள்ள எந்தவிதத் தடையுமில்லை. மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் அத்தகைய நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் உடற் பயிற்சி பரிந்துரை செய்கின்றனர். மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சையைத் தொடர்ந்து 2-4 வாரத்திற்குப் பின் வழக்கமான உடலுறவு வைத்துக் கொள்ள முடியும்.

இதயநோய் கண்டவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளின் போது மனைவியர்களையும் கூட வைத்துக் கொண்டே மருத்துவர்கள் தங்கள் கருத்துகளைக் கூற வேண்டும். அப்போதுதான் கணவனின் உண்மையான உடல்நிலை மனைவியர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் இதயநோயாளிகள் உடலுறவு கொள்ள தடையில்லை என்பதை மனைவிகளுக்கு மருத்துவர்கள் நேரில் விவரம் சொல்ல முடியும்

இதயத்துக்கு (Heart attack) வந்தபின் 40 நாள் கழித்து உடலுறவு கொள்ளலாம். மனைவியுடன் மட்டும் உடலுறவு செய்ய வேண்டும் மனைவி அப்போது அதிக ஈடுபாடு காட்டி நோயாளியின் உடலுக்குச் சிரமம் தராத உடலுறவு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

(நன்றி : மாற்று மருத்துவம் அக்டோபர் 2008)

Pin It