பெண் யோனியிலிருந்து, வெள்ளை நிறமாக, ஒட்டும் தன்மையுடன், வெளியாகும் கழிவு, வெள்ளையாகும். (அல்லது வெள்ளை ஒழுக்கு) பெண்களிடம், எல்லா வயதிலும், பலவகையாக, பல காரணங்களினாலும் வருகிறது. இது நிறமின்றி, வெள்ளை, பச்சை, மஞ்சள் நிறமாகவும், ஏராளமாகவும் வரலாம். காரணங்கள் சில கர்ப்பபை கழுத்தில், கர்ப்பபை, யோனி இவற்றில் புண்களால், சளி சவ்வில், செப்டிக் ஆதல் - கருப்பை புண், (செப்டிக் ஆதல்), மற்றும் ஷயம், புற்று நோயால், இவற்றால் வரலாம். கர்ப்பபையில் கட்டிகள், பாலிப்கள் (மெல்லிய திசு கட்டிகள்), கருச்சிதைவிற்குப்பின் செப்டிக் ஆதல், நஞ்சு தங்கி விடுதல் மற்றும் ரத்த குறைவு, மிகுந்த பலவீனம் போன்றவை மேலும் பல காரணங்களாலும் வரலாம். கர்ப்ப காலத்தில், மற்றும் சாதாரணமாக வரும் வெள்ளை போக்கு, இயற்கையானது, குறைந்த அளவிலே, இருக்கும்.
வியாதியுள்ள நிலையில், இது (வெள்ளை) நிறமின்றி வெள்ளை, பச்சை, மஞ்சள் நிறமாக, ஏராளமாக வரலாம். சளிபோல, சீழ் போல பிசின் போல, கோந்து போல, பாலாடை போல வரலாம். (நாள்பட்டதில், கெட்ட வாடை, சீழ் போல வரும் - காய்ச்சல், அதிக பலவீனம் இருக்கலாம்) புற்று நோயில் வருவது, துர்நாற்றத்துடன், ரத்தமும் கலந்து வரலாம்.
சிகிச்சை குறிப்புகள் :
கண்ணாடி போல, தெளிந்த நீர் போல, உள்ளது. - போராக்ஸ், நேட்ரம் மூர், கல்கேரியா பாஸ், செபியா
மிகுந்த பலவீனத்துடன் உள்ளது. - சைனா
பால் போன்ற ஒழுக்கு - பல்சடில்லா, செபியா, கல்கேரியாகார்ப்
ஒட்டும் தன்மையான ஒழுக்கு - காலிபைக்
கெட்டியான போக்கு நார் போன்று கயிறு போன்று உள்ளது. - ஹைட்ராஸ்டிஸ், காலிபைக்
சிறுமிகளுக்கு ஏற்படுவது - கால்கேரியா - கார்ப், செபியா, பல்சடில்லா
காரமான, நீர் போன்று, பால் போல, மஞ்சளான, சீழ் போன்றது. அரிப்புள்ளது. தயிர்போல, வரலாம். அடிவயிற்று வலியுடன் இழுப்பது போல உணர்வு மாதவிடாய் முன்பு (அதிகரிப்பு) - செபியா.
வீட்டு விலகிற்கு முன்பு வருதல் - செபியா,கிராபைடிஸ், கிரியோசோட்டம், கல்கேரியா கார்ப்
வீட்டு விலக்கிற்கு பின்பு (பிறகு) - கல்கேரியா, கார்ப், கல்கேரியா பாஸ், கிராபைடிஸ், கிரியோசோட்டம்
வீட்டு விலக்கிற்கு முன்பும், பின்பும் - கல்கேரியா கார்ப், கிராபைடிஸ்
கெட்டியான பாகுபோல், சில சமயம் எரிச்சலுடன்- பல்சடில்லா
அரிப்புள்ள வெள்ளைபாடு - கிரியோசோடம், நைட்ரிக் ஆசிட், செபியா
நீர் போன்ற போக்கு - கிராபைடிஸ், நேட்ரம் மூர், பல்சடில்லா
ரத்தமும் வெள்ளைபடுதலும் கலந்து - கல்கேரியா சல்ப், சைனா, நைட்ரிக் ஆசிட்
தொடையோடு அதிகமாக ஒழுகுதல் - அலுமினா, சிபிலினம்
உடலுறவிற்குப் பிறகு வருதல் - நேட்ரம்கார்ப், செபியா
துர்நாற்றத்துடன் - காலிபாஸ், கிரியோசோடம், நைட்ரிக் ஆசிட், சோரினம், செபியா
கடுமையான முதுகுவலி மலச்சிக்கலுடன் மூலவியாதி, வெள்ளைபடுதல் - அஸ்குலஸ்
சிறுநீர் கழிக்கும் சமயம் வெளிப்படுதல் - சிலிகா, கல்கேரியா கார்ப்
இரத்தத நீர் போன்ற ஒழுக்கு - நைட்ரிக் ஆசிட்
குபீர் குபீரென வெளிப்படும் வெள்ளைபாடு - கல்கேரியா கார்ப், கிராபைடிஸ், கிரியோசோட்டம், மெக் - மூர், செபியா, சிலிகா
மாதவிலக்கு நிற்கும் சமயம் - சோரினம்
காரமான தோலை உரிக்கும் தன்மையுடன் வெள்ளைபடுதல் - கிரியோசோட்டம், பல்சடில்லா, செபியா, சிலிகா, அலுமினா, போராக்ஸ், சிபிலினம், கிராபைட்டிஸ்
நீர் போன்ற பால் போன்ற காரமான வெள்ளை, விடாய் தாமதமாகவும், குறைவாகவும் இருக்கும் விடாய்க்கு முன்னும், விடாயின் போதும் (அதிகரிப்பு) - பல்சடில்லா
சீழ் போன்ற போக்கு - பல்சடில்லா, காலிபைக், செபியா, கிரியோசோட்டம்
விட்டு விட்டு வருதல் - கோனியம், சல்பர்
கர்ப்பிணிகளுக்கு - செபியா, கிரியோசோடம்
வலியுடன் போக்கு - மேக் மூர், சிலிகா, சல்பர்
(மாற்று மருத்துவம் ஜனவரி 2009 இதழில் வெளியான கட்டுரை)