ஜோத்பூரில் பாலைவன மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சார்பில் சமீபத்தில் உப்பளத் தொழிலாளர்களிடையே ரத்த அழுத்தம் குறித்த ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. உப்பளங்களில் உப்புத் துகள்களை மிகவும் நெருக்கமாக சுவாசிக்கும் தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்த நோய் மிகுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் இருக்கின்றன என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
உப்பளங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் உப்புத்துகள்களை நெருக்கமாக நுகரும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். மற்றொரு பிரிவினர் உப்புத் துகள்களை சற்றே தூரத்தில் கையாளும் பணிகளில் அமர்த்தப்பட்டனர். முதல் பிரிவினருக்கு சில நாட்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் ரத்த அழுத்தம் மிகுந்து இருப்பது கண்டறியப்பட்டது.
இதுவரை மிகுந்த ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உப்பை உணவில் குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றது. ஆனால் சுவாச மண்டலத்தில் செல்லும் உப்புக்காற்று ரத்தத்துடன் கலந்து மிக ரத்த அழுத்தத்தை உருவாக்கும் என்பது நவீன விஷயமாகும். இது தவிர பாதிக்கப்பட்ட உப்பைத் தொழிலாளர்களுக்கு இருதயம் மற்றம் இரத்தக் குழாய் நோய்கள் (கார்டியோ வாஸ்குலார் நோய்கள்- cardio vascular) மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
எனவே உப்பளத் தொழிலாளர்கள் முகமூடிகள் அணிந்தோ, பிளாஸ்டிக்கினால் ஆன கண்ணாடிகளை பயன்படுத்தியோ உப்புத்துகள்கள் நிறைந்த காற்றை சுவாசிப்பதை குறைத்துக் கொள்ளலாம் என பரிந்துரை செய்யப்படுகின்றது. உப்பளத் தொழிலாளர்களுக்கு முதல் கட்ட ரத்தக் கொதிப்பு நிலை தோன்றிய உடனேயே விரைவிலேயே இரண்டாம் கட்ட நிலை தோன்றுவதற்கான அறிகுறிகள் தோன்றிவிடுகின்றன. எனவே உப்பளத் தொழிலாளர்கள் முறையான ரத்த அழுத்த பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- இந்தியாவை பாரதம் என்று பெயர் மாற்றுவது இந்துத்துவ சூழ்ச்சி!
- சாதி ஒழிப்பே தீண்டாமைக்குத் தீர்வு
- வர்ணாசிரமம் வழிகாட்டும் குலத்தொழிலே விசுவகர்மா திட்டம்
- நூறாண்டுகளைக் கடந்த முதல் தமிழ்ச் சிறுகதை சொல்லும் செய்தியும் விமர்சனப் பார்வையும்
- தமிழ்நாட்டில் பாலின முரண்பாடு - மெய்மை நிலை
- சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும்
- சாம்பியன் திட்டம் சாகடிக்கப்படுமா?
- "குற்றவியல் நீதியிலிருந்து எங்களை விடுவி" - மூன்று குற்றவியல் சட்ட முன்வரைவுகள் குறித்து…
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினை ஐ.நா. சபைக்கு எடுத்துச் செல்லப்படும்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: இதயம் & இரத்தம்