கேள்வி:என் கணவருக்கு நாக்கு எப்பவுமே கசப்பாய் இருக்கிறதாம். மேலும் உடல் எப்போதும் உற்சாக மின்றி சோர்வாகவே உணர்கிறார். காரணம் என்னவாயிருக்கும்...?

பதில்: உடல், மனப் பலவீனம் இரண்டுமே காரணமாக இருக்கலாம். ப்ளட் ப்ரஷர், சர்க்கரை நோய் இரண்டும் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். சர்க்கரை நோய் இருந்தால் வாய் கசக்கும். நாக்கில் இன் ஃபெக்ஷன் இருந்தாலும் வாய் கசக்கும். நாக்கில் மாவு மாதிரி இருக்கும். சுவை தெரியாது.

வீட்டிலேயோ அலுவலகத்திலோ டென்ஷன் இருந்தாலும் சோர்வாக இருக்கலாம். போதுமான ஓய்வெடுத்தும், உடல் முழு உற்சாகத்துக்குத் திரும்பாமல் மீண்டும் களைப்பாகவே இருந்தால் அது மனச் சோர்வினால் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் டாக்டரிடம் சென்று சோதித்துப் பார்த்தால் சரி செய்து விடக்கூடிய சிறிய பிரச்னைதான். கவலைப்பட வேண்டாம்.

Pin It