நுண்ணுயிர் எதிர் பொருட்களும் ஏன் புதை படிவ பொருட்கள் போல என்று கூறப்படுகின்றன? இவை இரண்டும் நவீன உலகை படைக்க உதவின. ஆனால் மிதமிஞ்சிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. 1954ல் நுண்ணுயிர் எதிர் பொருட்கள் பரவலாக அறிமுகப்படுத்தப் பட்டபோது அதன் பக்கவிளைவுகளைப் பற்றி முன்பே தெரிந்திருந்தது. இவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் தாக்குதல்களை சமாளிக்கப்படும் என்று இயற்கைத் தேர்வு நியதியின் படி நம்பப்பட்டது. இன்று உள்ள ஒரு சிகிச்சைமுறை நாளை பயனற்றதாகிவிடும் என்பதை இப்பொருட்கள் எடுத்துக்காட்டுகின்றன.pills 720சோர்வை அகற்ற காபி

“கன்னி வெடிகள் அனைத்தும் அகற்றப்பட்ட பின் நாம் ஓடலாம்” என்று 1954ல் இப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் இது பற்றி வர்ணித்தார். எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த கவலை இப்போது வருவதை முன்கூட்டியே உணர்ந்து இவ்வாறு கூறப்பட்டது. நுண்ணுயிர் எதிர் பொருட்களின் எதிர்ப்பாற்றல் உலகின் ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் ஒரு பெரும் பிரச்சனை என்று ஐ நா கூறுகிறது. இதனால் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த பொருட்கள் போதிய அளவு வேகமாக இன்று கண்டுபிடிக்கப்படுவதில்லை. இப்போது பயன்படுத்தப்படும் பல முக்கிய பொருட்களும் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை. மற்றவை போல இவை சாதாரண மருந்துகள் இல்லை என்பதை. பெரும்பாலானவை மனித உயிரியலின் அடிப்படையில் கையாளப்பட்டவை. தலைவலி வந்தால் பாராசிட்டமால் சாப்பிடுகிறோம்.

அது வலியின் வேதி சமிஞ்ஞ்சைகளை மந்தமாக்குகிறது. காபியில் உள்ள காஃபின் அடினோசைன் (adenosine) ஏற்பிகளை தடுத்து சோர்வை அகற்றுகிறது. பாக்டீரியாக்கள் பரவும் குணமுடையவை. இதனால் ஏற்படும் சவால்கள் சமூகமயமானது. தலைவலிக்கு ஒவ்வொரு முறையும் ஒரு வலி நிவாரணியை சாப்பிடுகிறோம்.

அப்போது வேறு எங்கோ இருக்கும் யாரோ ஒருவர் மயக்க மருந்து இல்லாமல் அறுவைசிகிச்சை செய்யும் நிலை ஏற்படுகிறது.

நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் வேறு பல புதிய ஆயுதங்களை கண்டுபிடிக்கவேண்டும். இப்பொருட்களின் அசாதாரண ஆற்றல் மனிதனின் கடின முயற்சியால் உருவானவை இல்லை. நுண்ணுயிர்கல் போட்டியால் பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பரிணாமம் அடைந்துவிட்டன. மிதமிஞ்சிய அளவில் பயன்படுத்தப்படும் ஆபத்தான மற்ற்ஒன்று புதை படிவ எரிபொருட்கள்.

359 முதல் 299 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த பூமியின் காலகட்டத்தில் (Carboniferous period) பூமியின் நிலவியல் சக்திகளின் விசையால் உருவான மாற்றங்கள் போல இறந்த தாவரங்கள் எண்ணை மற்றும் நிலக்கரி அடுக்குகளாக மாறின. இவற்றை ஆற்றல் பெற நாம் பயன்படுத்துகிறோம். பரிணாமம் மூலக்கூறுகளை உருவாக்கியது. 20ம் நூற்றாண்டில் இவற்றால் நாம் இயங்குகிறோம்.

பென்சிலின் கண்டுபிடிப்பு

இதனால் மாயத் தோற்றம் உடைய, விலை மலிவான, அதிசயிக்கத்தக்க, முடிவில்லாத ஆற்றல் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. நிலக்கரியும் எண்ணையும் வழங்கிய வாக்குறுதிகள் இன்று முடிவிற்கு வர ஆரம்பித்துள்ளன. நுண்ணுயிர் எதிர் பொருட்கள் என்பவை புதை படிவ எரிபொருட்களின் நவீன உலகின் மருந்துகள். இம்மருந்து பொருட்களின் யுகம் ஒரு நூற்றாண்டிற்கும் குறைவான பழமையுடையதே.

அலெக்சாண்டர் ப்ளெமிங் 1928ல் ஒரு வித்தியாசமான செயலை முதல்முறையாக கவனித்தார். ஆனால் 1930கள் வரை செயல்மிகு பொருளான பென்சிலின்தான் அது என்று தனியாகப் பிரித்தறியப்படும் வரை அது பற்றி தெரியவில்லை. அன்றாடம் ஒரு டோசேஜ் என்பது வெறும் 60 மில்லி கிராம் மட்டுமே. இது ஒரு சிட்டிகை உப்பிற்கு சமம். என்றாலும் பல ஆண்டுகள் வரை இதன் விலை தங்கத்தை விட அதிகமாக இருந்தது.

ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது இதன் உற்பத்தி அதிகமானது. மருந்துப் பொருளின் விலை பென்சிலின் மருந்து இருந்த பாட்டிலை விட மலிவாக மாறியது. இது போல முதலாளித்துவத்திற்கு எதிராக, ஒவ்வொரு முறை பயன்படும்போதும் விலை மலிவாகும் பொருள் வேறெதுவும் இல்லை. இதன் அபரிமிதமான இருப்பு நோய்களை சமாளிப்பதற்கு பதில் பாதிப்பையே அதிகமாக உண்டாக்கியது. புதை படிவ எரிபொருட்களால் கிடைக்கும் ஆற்றலைப் போன்றதே இது.

நவீன மருத்துவத்தின் பெரிய வளர்ச்சியாக இம்மருந்துகள் மாறின. தோலைத் திறந்து அறுவை செய்யும்போது பாக்டீரியாக்களின் பெருந்திரள் உட்புற திசுக்களுக்குள் நுழைந்தது. இவை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு எளிய செயல்முறைகள் கூட அடிக்கடி ஆபத்தான இரத்த நஞ்சுத் தொற்றை ஏற்படுத்தின. இதயம், சிறு குடல் அறுவைசிகிச்சைகள், உடல் உறுப்பு மாற்றம் போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

அதிக உற்பத்தியில் ஹைதராபாத்

புற்றுநோய் சிகிச்சையில் கீமோதெரபி (Chemotherapy) சிகிச்சகைகளில் மிக பரவலான சிக்கல்களில் ஒன்றான பாக்டீரியா தொற்றுகள் ஏற்பட்டன. நுண்ணுயிர் எதிர் பொருட்கள் விலங்குகளில் நோய்களைக் குறைத்து, அவற்றின் வளர்சிதை மாற்றத்தில் சிக்கலான விளைவுகளை உண்டாக்கியது. எடை அதிகரித்தது. பண்ணை பொருட்கள் தொழில் துறை ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டன. 1950கள் முதல் பெருமளவு இறைச்சி நுகர்வு ஏற்பட்டது.

நன்மைகளும் தீமைகளும் ஒன்றுசேர்ந்து வந்தன. இப்பொருட்களின் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இவற்றின் விலை மற்ற மருந்துகளை விட மலிவாக மாறின. இவற்றால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. புதை படிவ எரிபொருட்கள் போலவே இவை சூழலை மாசுபடுத்துகின்றன.

உலகளவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் 40 நுண்ணுயிர் எதிர் மருந்துகளில் 31% உலக நதிகளில் கலக்கின்றன. 1970கள் முதல் சில நுண்ணுயிர் எதிர் மருந்துகளின் மரபணுக்களின் எதிர்ப்பாற்றல் 15% அதிகரித்துள்ளது. இந்தியா போன்ற சில நாடுகளில் தொழில் உற்பத்தி மற்றொரு மாசுபடுத்தி. உலக சந்தை விநியோகத்திற்காக ஹைதராபாத் பெருமளவில் நுண்ணுயிர் எதிர் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.

*இதனால் வேறெங்கும் இல்லாத அளவிற்கு இங்கு மில்லியன் மடங்கிற்கும் அதிகமாக இவற்றின் மாசு உள்ளது. காலநிலை மாற்றம் போல இப்பொருர்ட்கள் உலகளவில் சமத்துவமின்மையை ஏற்படுத்துகின்றன. அபரிமிதமான இந்த மருந்துகளின் பயன்பாட்டிற்குப் பிறகே இவற்றின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. விலை மலிவான புதை படிவ எரிபொருட்களை பயன்படுத்தவேண்டும் என்று வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளை வலியுறுத்துவது போலவே இது.

புதை படிவ எரிபொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும் நாள் வரவேண்டும். இது போன்ற நிலை நுண்ணுயிர் எதிர் மருந்துகளுக்கு ஏற்படாது. மருந்து நிறுவனங்கள் புதிய எதிர் மருந்துகள் உற்பத்தியை கைவிட்டுவிட்டன. இதற்கு ஒரு தீர்வாக அரசுகள் சார்பில் இவற்றின் உற்பத்திக்காக சர்வதேச அளவில் ஒரு கழகம் நிறுவப்படவேண்டும்.

இவற்றின் மிதமிஞ்சிய பயனைக் கட்டுப்படுத்தவும் புதிய மருந்துகளை கண்டுபிடிக்கவும் உதவுவது இன்னொரு தீர்வு. எடுத்துக்காட்டு இங்கிலாந்தில் தேசீய மருத்துவ சேவை சார்பில் இரண்டு தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மூளைக் காய்ச்சல் (Meningitis), தொண்டை அழற்சி (Diphtheria) மற்றும் கக்குவான் இருமல்(whooping cough) போன்றவற்றிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனால் இப்பொருட்களின் பயன் பெருமளவில் குறைந்துள்ளது. ஆரோக்கியத் துறையில் இன்று உருவாகியுள்ள அபரிமிதமான மாற்றங்களுக்கு இப்பொருட்கள் மட்டும் காரணமில்லை. கை கழுவுதல் போன்ற சுய தூய்மை, சுற்றுப்புறத் தூய்மை செயல்களின் விழிப்புணர்வால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று கரியை எஇப்பதற்கு முன்பு இன்று சூழல் பற்றிய சிந்தனை அதிக அளவில் உள்ளது போல இப்பொருட்களின் கவனமான பயன்பாடு மாறவேண்டும்.

காலநிலை மாற்றத்தின் தீமைகள் குறித்து இப்போது நாம் விழித்துக்கொண்டுள்ளோம். நுண்ணுயிர் எதிர் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வும் விரைவில் ஏற்படும்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக உயிரியலாளரும் ஆபத்தான அதிசயம் (Dangerous Miracle) என்ற நூலின் ஆசிரியரும் இவற்றை விரிவாக ஆராயும் ஆய்வாளருமான லியம் ஷோ (Liam Shaw) கூறுகிறார். இந்த மருந்து பொருட்கள் பற்றி நிலவிவரும் அறியாமை அகல இந்த ஆய்வுகள் உதவும் என்று நம்பப்படுகிறது.

சிதம்பரம் இரவிச்சந்திரன்