அலோபதி சிகிச்சைகளுக்கு ஆகும் செலவு, பக்கவிளைவுகள் போன்றவற்றால் சித்தா, ஆயுர்வேதம் போன்ற மாற்று மருத்துவத்தில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல நோய்களை பற்றியும், அவற்றுக்கான மருந்துகள் குறித்தும் சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைத்துள்ளனர் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். உலகின் மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரிகள் உள்ள ரஷ்யாவிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் இந்திய மருத்துவ முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவத்துக்கு என்று இந்திய அரசு Indian Systme of Medicine and Homeopathy என்ற தனித்துறையை ஆரம்பித்துள்ளது. மாற்று மருத்துவம் படிப்பவர்களும் அலோபதி மருத்துவம் படிப்பவர்களைப் போலவே Anatomy, Human Physiology போன்றவற்றைத் தான் படிக்கின்றனர். நோயின் வகை பிரிப்பிலும், குணப்படுத்தும் முறையிலும் தான் மருத்துவம் மாறுபடுகிறது.

மாற்று மருந்துகள் பெரும்பாலும் இலை, மரப்பட்டை, பூக்கள் போன்ற இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படுவதால் பக்கவிளைவுகள் இல்லை. மேலும் பல நாள்பட்ட நோய்களையும் இவை குணப்படுத்துவதால் மக்களின் கவனம் மாற்று மருத்துவத்தின் மீது திரும்பியுள்ளது.

Pin It